India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.200 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே கடன் தேவைப்படும் விவசாயிகள் தாங்கள் உறுப்பினராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளித்து கடன் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் தீவன அபிவிருத்தி திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறை இந்த ஆண்டு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்திற்கு மானியம் வழங்க உள்ளதால் எஸ்சி, எஸ்டி இனத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அனுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று அறிவித்துள்ளார்
நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் 02.07.24 அன்று கலைஞரின் கனவு இல்லத் திட்ட சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்ட பயனாளிகள் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது நீக்க பயனாளிகளை தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே, இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்குபெற வேண்டுமென இன்று நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச்சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் உறுப்பினர் பதிவை புதுப்பித்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வா்கீஸ் நேற்று தெரிவித்துள்ளார். தகவலுக்கு 04365 – 251562 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த திருப்புகலூரில் வாஸ்து தலமான அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இன்று சாமி தரிசனம் செய்தார். தஞ்சாவூரில் நடந்த படப்பிடிப்புக்காக வந்த சசிகுமார், அக்னீஸ்வரரை தரிசிக்க வந்தது தெரியவந்தது. கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சசிகுமாரை அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டனர் .
தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச்சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் உறுப்பினர் பதிவை புதுப்பித்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வா்கீஸ் இன்று தெரிவித்துள்ளார். தகவலுக்கு 04365 – 251562 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை கீழ்வேளூர் தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் ஒருபோக சாகுபடி செய்வதற்காகவும் காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் உள்ள சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதை புத்தக தொகுப்பு வெளியிடவுள்ளது. இதற்காக எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை வருகின்ற 10.07.2024க்குள் nagaibookfair2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாகை மாவட்டத்திற்கு அரசு காஜி தேர்வு செய்யப்பட உள்ளனர். முஸ்லிம் மதத்தில் நன்கு அரபி தெரிந்த ஆலிம்கள், அரபி கல்லூரி ஆசிரியர்கள் காஜி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 5ஆம் தேதிக்குள் மனு அளித்திட வேண்டும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் நேற்று மாலை தெரிவித்துள்ளார்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் நாகை மாவட்ட செயலாளர் முருகையன் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “100 நாள் பணியை உடனே தொடங்க கோரி நாகை மாவட்டத்தில் நாளை 100 இடங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.