India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
நாகை மக்களவைத் தொகுதியில் 7,92,848 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 6 சட்டமன்ற தொகுதியிலும், மொத்தம் 1551 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், நாகை மாவட்டதில் வாக்குச்சாவடி மையங்களில் 3190 அலுவலர்கள், 59 நுண் பார்வையாளர்கள், 336 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 7500 அரசு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்களை அழைத்து வருவதற்கும் பின் அழைத்து செல்வதற்கும் வேட்பாளர்களோ அவரது முகவர்களோ வாகனங்களை பயன்படுத்தினால் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜானிடாம் வர்கிஸ் எச்சரித்தள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் ஆணைப்படி நாளை தேர்தல் நாளன்று வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது என்றும் நாமும் நம்மிடம் பணிபுரியும் ஊழியர்களும் ஜனநாயக கடமையை ஆற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்றும் நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு வருகின்ற 21 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. நாகை மாவட்டத்தை சேர்ந்த 2005 செப்டம்பர் 1 ஆம்ட தேதிக்கு பின் பிறந்தவர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜூலியஸ் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
கீழக்காவலாக்குடியைச் சேர்ந்தவர் அருண்குமார்(26), கூலி தொழிலாளி. நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தேவூர் கடைத்தெருவுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தேவூர் பெட்ரோல் பங்க் அருகே வரும்போது கீழத்தெருவை சேர்ந்த மூவேந்தன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலே பலியானார்.
திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி ஹாஜரா பேகம் தெருவை சேர்ந்தவர் பாவாஷா ஜலாலுதீன் (58). கட்டிட கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஏனங்குடி சத்திரம் குளத்தில் ஓரமாக உள்ள கட்டையில் அமர்ந்துள்ளார். திடீரென மயக்கம் ஏற்பட்டு குளத்தின் உள் தவறி விழுந்துள்ளார். இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஜலாலுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருகண்ணபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
நாகை அருகே தென்மருதூரில் மூன்று தலைமுறைகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பட்டா வழங்க பலமுறை மனு அளித்துள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அதிரடி முடிவெடுத்து பூத் ஸ்லிப்பை வாங்க மறுத்து கோஷங்கள் எழுப்பி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம், நாயுடு அரங்கத்தில் இன்று, சிவசேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சுந்தர் வடிவேலன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், அதில் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு சுமைகளை மக்கள் மீது சுமத்தி இருக்கும் பாஜகவை எதிர்த்தும், ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்று கூறி இந்திய கூட்டணிக்கு தங்களுடைய முழு ஆதரவு இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 6 மணிக்கு மேல் வேட்பாளர்கள் உள்ளிட்ட யாரும் எவ்வித பிரச்சாரத்திலும் ஈடுபட கூடாது என்றும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத அனைவரும் நாகை மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் உத்தரவிட்டுள்ளார்
Sorry, no posts matched your criteria.