Nagapattinam

News July 15, 2024

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை

image

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே‌.பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தினார். நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

News July 15, 2024

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைப்பு

image

தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு புனித செபஸ்தியார் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் ஆகியோர் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டனர்.

News July 15, 2024

நாகையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

image

தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், குமரி, தருமபுரி, காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 14, 2024

நாகை பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்

image

தமிழகம் முழுவதுமுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் நாளை துவங்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி கிழக்கு கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இந்த திட்டத்தினை ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் காலை 8 மணிக்கு துவங்கி வைக்கிறார். இதேபோல மாவட்டம் முழுவதும் இந்த திட்டம் நாளை தொடங்குகிறது. 

News July 14, 2024

கடின உழைப்பால் ஐபிஎஸ் : போலீஸ் சூப்பிரண்டு பேச்சு

image

நாகை நடராஜன் மேல்நிலைப்பள்ளி விழாவில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பின்னர் அவர்களிடம் பேசியது: மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே தங்களுடைய இலக்கு என்ன? என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் கடினமாக உழைத்ததால் ஐ.பி.எஸ். ஆனேன். பொது அறிவு, நாட்டு நடப்புகளை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

News July 13, 2024

நாகை: 537 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை 

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு(குரூப் 1) இன்று நாகை மாவட்டத்தில் 3 தனியார் கல்லூரிகளில் நடைப்பெற்றது. இந்த தேர்வை எழுத 1628 நபர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 1091 நபர்கள் மட்டுமே இன்று தேர்வு எழுதினர். 537 நபர்கள் இன்று குரூப் – 1 தேர்வை எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

News July 13, 2024

காணாமல் போன 7 பேர் கண்டுபிடிப்பு

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை தனியார் மண்டபத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் நாகை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதியப்பட்ட காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை மறு விசாரணை செய்து காணாமல் போன 7 நபர்களை கண்டுபிடித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

News July 13, 2024

நாகை மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஜூலை 30ஆம் தேதியும், கலைஞர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி ஜூலை 31ஆம் தேதியும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று தெரிவித்துள்ளார். இப்போட்டி நாகை ஆண்டவர் நர்சிங் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பங்கு பெறலாம்.

News July 12, 2024

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ராகவேந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

News July 12, 2024

குடிமைபணிகள் தேர்வு குறித்த ஆய்வு கூட்டம்

image

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைப்பெற உள்ள குடிமைப்பணிகள் தேர்வு ஜூலை 15-ஆம் தேதி 3 தனியார் கல்லூரிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தலைமையில் இன்று நடைப்பெற்றது. கூட்டத்தில் தேர்வு நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

error: Content is protected !!