India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 333 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு மேற்கு பகுதியில் வசிப்பவர் சமூக ஆர்வலர் செந்தில். இவரது வீட்டு தோட்டத்தில் இன்று காலை அரிய வகை ஆஸ்திரேலிய ஆந்தை வந்துள்ளது. இதனை கண்ட செந்தில் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக வந்த வன அலுவலர் பாண்டியனிடம் ஆஸ்திரேலிய ஆந்தையை செந்தில் ஒப்படைத்துள்ளார்.
நாகை மீனவர்கள் 10 பேரின் நீதிமன்றக் காவலை 3ஆவது முறையாக இலங்கை மல்லாகம் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஜூன் 25ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும், இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களின் காவல் ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாகை ஆட்சியராக இருந்த ஜானிடாம்வர்கீஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு ஆகாஷ் புதிய மாவட்ட ஆட்சியராக கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அனைத்துத்துறை அதிகாரிகளும் பொறுப்புணர்வோடு மக்களுக்காக செயல்பட வேண்டும் என்றும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன் என்றும் புதிய ஆட்சியர் கூறினார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக பி.ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பணி மாறுதல் ஆகி சென்ற நிலையில் இன்று புதிய மாவட்ட ஆட்சியராக பி.ஆகாஷ் பதவியேற்க உள்ளார். இன்று ஆட்சியர் அலுவலகத்தில் 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்றைய வெப்ப நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழநாட்டில் அதிகபட்சமாக நாகப்பட்டினம், தஞ்சாவூரில் தலா 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக மதுரை விமான நிலையம் 102, காரைக்காலில் 101 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுமையான வெப்பத்தால் நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனிநபர்கள் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் தகவல்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
மேலப்பிடாகையில் கடந்த 4-ந்தேதி தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 200 கிலோ கஞ்சா சிக்கியது. இதில் தெட்சணாமூர்த்தி, சிவமூர்த்தி, மணிராஜ், கௌதம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான கோடியக்காட்டை சேர்ந்த அறிவழகன் என்பவரை தனிப்படை போலீசார் இன்று பிரதாபராமபுரத்தில் கைது செய்தனர். இவர் அதிமுகவை சேர்ந்த வேதாரண்யம் ஒன்றிய குழு வைஸ் சேர்மன் ஆவார்.
நாகை மாவட்டத்தில் தொடர் சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மி.ஆர்.புரத்தைச் சேர்ந்த ஆண்டனிராஜ், செல்லூர் பகுதியைச் சேர்ந்த பதினெட்டாம்படியான், ஜெல்சன், கீழ்வேளூரைச் சேர்ந்த சபரிநாதன், வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கமல் ஆகிய 5 நபர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்து எஸ்பி ஹர்ஷ் சிங் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் திருச்சி, மதுரை, நாகை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் 9 காவல்துறை அதிகாரிகள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாகை துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் வேதாரண்யத்திற்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.