India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை தமிழக சட்ட துறை அமைச்சர் ரகுபதி இன்று மதியம் 3 மணியளவில் வழங்குகிறார். அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு நாகை புதிய பேருந்து நிலையத்தில் 5 புதிய பேருந்துகளை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
நாகை அபிராமி சன்னதி திடலில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜ் புகைப்படம் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பதாகை காரணமாக சர்ச்சை எழுந்துள்ளது. நாகை காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் மாவட்ட தலைவரின் புகைப்படம் இல்லாமல் அக்கட்சியினர் சிலர் பதாகை வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை.26-இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மானியத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் ஜியோ உட்பட 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேதாரணியம் வட்டம் அவரிக்காடு ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிவரும் காலனி தெருவைச் சேர்ந்த பாப்பம்மாள் என்பவரின் மகள் திருமணத்திற்கு தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர் நல வாரியத்திலிருந்து திருமண உதவித்தொகை ரூ.5000/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று (ஜூலை.23) வழங்கினார்.
தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து நாகை அபிராமி சன்னதி திடலில் இன்று மாலை அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜெயபால், ஜீவானந்தம், நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
கீழ்வேளூர் யாதவ நாராயண பெருமாள் கோவிலின் உப கோவிலான பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இன்று அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1.50 கோடி ஆகும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் ஒழிப்பது தொடர்பான வாராந்திர ஆய்வு கூட்டம் நேற்றிரவு நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சி தலைவர் ப. ஆகாஷ் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் வருவாய் துறை மற்றும் கலால் துறை அலுவலர்கள் பங்கேற்று கள்ளச்சாராயம் ஒழிப்பது தொடர்பான கருத்துக்களை தெரிவித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக ரஞ்சித் சிங் பணியாற்றி வந்த நிலையில், தமிழ்நாடு அரசு அவரை சேலம் மாநகராட்சின் ஆணையராக நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதேபோல் தமிழ் நாட்டில் உள்ள மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பிரபல யூடியூபர்கள் கோபி, சுதாகர் ஆகியோர் வருகை தந்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டும் செல்பி எடுத்து கொண்டனர்.
கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி தி.மு.க இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்னும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் தகவல்களும் kalaignar100pechu.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 25-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.
Sorry, no posts matched your criteria.