Nagapattinam

News May 25, 2024

நாகை: சாலையில் திரியும் கால்நடைகளால் அவதி!

image

நாகை மாவட்டம் தலைஞாயிறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு பிரதான சாலைகளில் அதிக அளவில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்தும் நடப்பதால், கால்நடை வளர்ப்போர் அதனை முறையாக கட்டி பராமரிக்க வேண்டும் என கால்நடை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 24, 2024

நாகை: மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் தங்களது உதவி தொகையை தொடர்ந்து பெற ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் நகல் குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் 10க்குள் சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

News May 24, 2024

நாகை: விருது பெற விண்ணப்பிக்கலாம்!

image

தேசிய அளவில் வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் டென்சிங் நார்கே விருது வழங்கப்படுகிறது. ரூ.15 லட்சம் வெண்கல சிலை சான்றிதழ் பரிசாக வழங்கப்படுகிறது. எனவே நாகை மாவட்டத்தில் நீர், நிலம், ஆகாயம் ஆகிய ஏதேனும் ஒன்றில் சாதனை புரிந்தவர்கள் மே 31க்குள் awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

News May 23, 2024

நாகை: மீன்பிடி விசைப்படகுகள் நாளை ஆய்வு

image

நாகை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் நாளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களால் நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த படகு உரிமையாளர் ஆய்வு நாளன்று படகினை தங்களது பதிவு செய்யவில்லை என்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். பைபர் படகுகள் அனைத்தும் ஜூன் 10ஆம் தேதி ஆய்வு செய்யப்பட உள்ளது.

News May 23, 2024

நாகை: 7 மணிவரை மிதமான மழை

image

நாகை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 23, 2024

நாகை மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை

image

நாகை அரசு தலைமை மருத்துவமனையின் சில பிரிவுகள் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தூர் மருத்துவ கல்லூரிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து பிரிவுகளும் நாகையில் செயல்பட வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் திமுக மாவட்ட செயலாளர் கவுதமன் நகரமன்ற தலைவர் மாரிமுத்து வர்த்தக சங்க தலைவர் சுபாஷ் சந்திரன் ஆகியோர் இன்று காலை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கோரிக்கை விடுத்தனர்.

News May 23, 2024

நாகை: இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கு இன்று (மே.23) காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 23, 2024

மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஹர்சிங் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து 11 மனுக்களை பெற்றார்கள். பெறப்பட்ட மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். உங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்க எஸ் பி யுடன் பேசுங்கள் 8428103090 எண்ணில் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

News May 22, 2024

நாகை : இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பயன் பெற்றவர்கள்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 1465 பேருக்கு ரூபாய் 98 லட்சத்து 72 ஆயிரத்து 725 மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தினால் சாலை விபத்தில் ஏற்படும் உயிர் இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!