India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகூர் தர்காவில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நாகூர் தர்கா குளத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று காலை 9.45 மணியளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு காவல் நிலையத்தில் மோகன்ராஜ் என்பவர் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். இவரின் மனைவிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு தற்போது திருச்சி காவேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், முதற்கட்ட மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,17,400ஐ உதவி ஆய்வாளரின் உறவினரை நேரில் அழைத்து இன்று அளித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று ஜூலை 31) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயனடையும் வகையில் மாட்டு சந்தை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகை மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், சம்பா சாகுபடி முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
வேளாங்கண்ணி ஆர்ச் அருகே உள்ள சுனாமி ஸ்தூபி அருகே 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி, சாலையை கடக்க முயன்றார். அப்போது, வேதாரண்யத்தில் இருந்து உப்பு ஏற்றி சென்ற லாரி ஒன்று
அவ்வழியாக வந்தபோது மூதாட்டி மீது லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர் யார், அவரது ஊர் குறித்து விசாரித்தனர்.
நாகூர் சித்திக் சேவை தர்ம அறக்கட்டளை சார்பாக நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்து திருவாரூர்-திருச்சி மார்க்கமாக செல்லும் ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க கோரியும் மற்றும் ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மனு அளித்தனர். இதில் நிறுவன தலைவர் நாகூர் சித்திக், நாகூர் ரோட்டரி கிளப் தலைவர் ரமேஷ், இந்திய வர்த்தக தொழிற் குழுமம் துணைத் தலைவர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகள் ஆய்வு செய்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அது குறித்தும் கேட்டறிந்தார். அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும் இன்று (ஜூலை 30) ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ”உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று(ஜூலை 30) கள ஆய்வு மேற்க்கொண்டார்.உடன் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ஆர்.செந்தில்நாதன் மருத்துவமனையின் செயல்பாடுகளை விவரித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அக்கரைப்பேட்டை முதல் கும்பகோணம் வரை மீன் வியாபாரத்திற்கு பயன்படும் வகையில் மக்கள் பாதுகாப்பாக செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் வாரம் இரண்டு முறை சிறப்பு பேருந்து சேவையை நாகை மாவட்ட தி.மு.க செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவருமான என்.கெளதமன் துவக்கி வைத்தனர்.
நாகை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற ஆகாஷ் தலைமையில் முதலாவது விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நாளை(ஜூலை 31) நடைபெறுகிறது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மைக் கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.