Nagapattinam

News August 5, 2024

நாகை மீனவர்களின் காவல் 4-ஆவது முறையாக நீட்டிப்பு

image

நாகை மீனவர்கள் 10 பேரின் காவலை 4-ஆவது முறையாக நீடித்து இலங்கை மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலை ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீடித்ததால் மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 10 பேரை கடந்த ஜூன் 25-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 5, 2024

நாகையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், (ஆகஸ்ட்.5) காலை 10 மணி வரை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்.

News August 4, 2024

நாகை எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்த தலைமையாசிரியர்

image

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களை நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.பாலு சந்தித்து பள்ளியில் திறன் வகுப்பறை (Smart Class) அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். விரைவில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்து தரப்படும் என எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.

News August 4, 2024

கீழ்வேளூர் அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

image

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 15 வார்டுகளிலும் அதிமுக உறுப்பினர்களின் வீடுகளுக்கே சென்று நாகை மாவட்ட துணை செயலாளர் டெல்மா லாசர் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இதில் கீழ்வேளூர் பேரூராட்சி அதிமுக செயலாளர் J.B.முரளி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 4, 2024

நாகையில் மா பிஞ்சில்  பூச்சி தாக்குதல் 

image

புதுப்பள்ளி, பூவைத்தேடி, காமேஸ்வரம், உள்ளிட்டமாஸ் சாகுபடி நடைபெற்று வருகிறது.  தற்போது ஆடிப்பட்டம் சீசன் தொடங்கியுள்ளதால் பூ வைக்க தொடங்கிய நிலையில் தத்துப்பூச்சி, மாவு பூச்சிகள் மா இலைகள் மற்றும் பூக்களின் மீதும், மா பிஞ்சுகள் மீதும் தாக்க தொடங்கியுள்ளது. இதனால் பூ உதிர்வு, மாபிஞ்சுகள் மரத்திலிருந்து உதிர்வதால் மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக  விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

News August 4, 2024

நண்பன்னா என்னான்னு தெரியுமா?

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம். ஜூன் மாதம் து.பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள 2,16,292 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம்.

News August 4, 2024

வேளாங்கண்ணி பேராலயத்தில் பணிகள் தீவிரம்

image

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. ‘பசிலிக்கா’ என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்ற ஆலயத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்து இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 29-ஆம் தேதி புகழ்பெற்ற இந்த பேராலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதன் காரணமாக பேராலய வளாகத்தில் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News August 3, 2024

நாகை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சிவகங்கை, புதுக்கோட்டை, ராம்நாடு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW!

News August 3, 2024

நாகையில் சதம் அடித்த வெயில்

image

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில், 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து தஞ்சையில் 102.2, நாகப்பட்டினத்தில் 101.48, பாளையங்கோட்டையில் 101.3, திருச்சியில் 100.94, கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT NOW!

error: Content is protected !!