Nagapattinam

News October 25, 2024

நாகை மாவட்ட கலெக்டர் முக்கிய தகவல்

image

நாகப்பட்டினம் மாவட்டம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்) (Combined Technical Services Examination (Non – Interview Posts) வரும் 26.10.2024 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

ஆலத்தூரில் மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பலி

image

ஆலத்தூரை சேர்ந்த சண்முகநாதன் (வயது 27) விவசாயி இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி கருகிய நிலையில் சண்முகநாதன் கீழே கிடந்துள்ளார்.திட்டச்சேரி போலீசார் அவர் உடலை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.திருமணம் ஆகி 8 மாதங்களே ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

News October 24, 2024

நாகை மாவட்டத்தில் 18,193 மாற்றுத் திறனாளிகள் பயன்

image

நாகை மாவட்டத்தில் 18,193 மாற்றுத்திறனாளிகள் அரசு பதிவு பெற்றுள்ளனர். இவர்களில் 2,929 பேர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2,000 மற்றும் வருவாய்த்துறை சார்பில் 5,510 பேர் ரூ.1,500 வீதமும் பெற்று பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் 8,439 பேர் மாதாந்திர உதவித்தொகை பெறுகின்றனர் என நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News October 24, 2024

பட்டாசு விபத்தா, தகவல் தர உதவி எண்கள்

image

நாகை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் ஆகாஷ் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் பட்டாசு வெடிக்கும் போது கால் நடைகள் கட்டி இருக்கும் இடத்தில் வெடிக்க கூடாது. அதனால் மிரண்டு ஓடும் கால்நடைகளால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அவதி அடைவர். மேலும் பட்டாசுகளினால் விபத்து ஏற்பட்டால் காவல் துறைக்கு 100 தீயணைப்பு துறைக்கு 101, மருத்துவ உதவிக்கு 108, தேசிய உதவி எண் 112 ஆகியவற்றை தொடர்புகொள்ள கேட்டு கொண்டுள்ளார்.

News October 24, 2024

கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள் ஆய்வு

image

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் 2024-25 ஆண்டுகளுக்கான கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பெரிய குத்தகை பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்

News October 24, 2024

நாகை ஆட்சியர் வேண்டுகோள்

image

விபத்தில்லா மற்றும் ஒலி மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களை நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொதுமக்கள் தீபாவளி பாண்டிகையை பாதுகாப்பான வகையிலும், அதிக மாசு ஏற்படாத வகையில்,  பசுமை பட்டாசுகள் மட்டும் வெடித்து கொண்டாட அறிவுறுத்தினார். 

News October 23, 2024

அரசு பணியாளர்கள் மனித சங்கிலி போராட்டம்

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் சந்திரவேல் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாநில செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

News October 23, 2024

நாகை எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகள் தொடர்பாக 9 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சரக போலீசாருக்கு உத்தரவிட்டார்.

News October 23, 2024

நாகை துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

டானா என பெயரிடப்பட்டுள்ள புயல் தீவிர புயலாக வலுப்பெற்று, 24ஆம் தேதி இரவு மற்றும் 25ஆம் தேதி காலை பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, கடலூர், எண்ணூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி நாகை, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

News October 23, 2024

அயோடின் உப்பில் சேர்க்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை

image

அயோடின் குறைபாட்டால் தைராய்டு, அறிவு குறைவு, மனக்கோளாறு, கருச்சிதைவு போன்றவை ஏற்படுகிறது. இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்க்க அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே உப்பு விற்பனை செய்பவர்கள் அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அயோடின் இல்லாத உப்பு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரித்துள்ளார்.