India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டம் தொழுதூர் கிராமத்தை சேர்ந்த இந்திராவின் கணவர் ஜோதிபாஸ் கொத்தங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் தரண்யாவிடம், தனது மனைவி பெயரில் உள்ள வங்கி கணக்கு பி.டி.ஓ.-வால் முடக்கப்பட்டது குறித்து தகராறு ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் தரண்யா வலிவலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் ஜோதிபாஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
கடற்படையில் உள்ள 327 குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் பதவிக்கு 57 காலிப்பணியிடங்களும், லஸ்கார்- I பதவிக்கு 192 காலிப்பணியிடங்களும், தீயணைப்பாளர் பதவிக்கு 73 காலியிடங்களும், டோப்பஸ்பதவிக்கு 5 காலியிடங்களும் நிரப்பபடவுள்ளது. மாத ஊதியம்: லஸ்கர்களின் சிராங் பதவிக்கு மாதம் ரூ.25,500 முதல் 81,100/- கிடைக்கும். நபர்களுக்கும் Share பண்ணுங்க
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நாளை (19.03.2025) காலை 9:00 மணியளவில் நடைபெற உள்ளது என்பதாக செய்தி மக்கள் தொடர்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது
அதிகாரிகள் சொல்வதை கேட்க மறுக்கும் கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்களுக்கு எதிராக செயல்படும் அரசு கேபிள் டி.வி.அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகூர் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்ட புதிய கேபிள் டி.வி.ஆப்ரேட்டர் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என 100க்கும் மேற்பட்ட கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் நாகை ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.
நாகை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள், மாணவர்களுக்கான முன்னறிவிப்புகள், மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் உட்பட, நாகை மாவட்டத்தில் என்ன நடக்கிறது? என அறிந்து கொள்ள @nagapattinam – Collector என்ற முகவரியில் பேஸ்புக், யூடியுப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ள சமூக வலைதளங்களில் பின்பற்றுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க..
நாகை, திருமருகல் வட்டாரத்தில் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி முடிந்து பின் வயல்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருவம் தவறிய மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளாலும், பூச்சி நோய் தாக்கப்பட்டாலும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.956 பிரீமியமாக செலுத்த வேண்டும். இந்த பிரீமியம் தொகை செலுத்த வருகிற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
ஊரகப் பகுதிகளில் குறுந்தொழில், சிறு தொழில், இயந்திரங்கள் நிறுவுதல் ஆகிய பணிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்/ ஊராட்சிகளின் ஆய்வாளர் அவர்களின் அனுமதி பெற்று தொடங்க வேண்டும். தொழிற்சாலையின் பரப்பளவிற்கு ச. மீ கட்டணம் ரூ 150 நிர்ணயித்தும் தீயணைப்பு துறை அனுமதி, நகர் ஊரகத்துறை, இதர தொடர்புடைய துறைகள் அனுமதி மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <
தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து, அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தேர்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் ஆலோசனைகளை தெரிவிக்கலாமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்தகவலை அரசியல் கட்சியினருக்கு SHARE பண்ணுங்க..
கீழையூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி(24) மற்றும் ராமநாயக்கன் குளத்தெருவைச் சேர்ந்த முகேஷ்குமாா்(28) இருவரும் கடந்த கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, பிரதாபராமபுரம் பகுதியில் மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதனால் ஏற்பட்ட தகராறில், பாலாஜி செங்கற்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது சம்பந்தமாக கீழையூர் போலீசார் பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சரவணன், ஜெயபால் ஆகியோரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.