Nagapattinam

News July 10, 2025

நாகை: நாய் குறுக்கே வந்ததால் சாலை விபத்தில் ஒருவர் பலி

image

நாகை மாவட்டம் புஷ்பவனத்தைச் சேர்ந்தவர் கதிரவன். இவர் நேற்று (ஜூலை 9) இரவு வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி சாலையில் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்த போது, நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்ததுள்ளது. இதில் நிலை தடுமாறிய கதிரவன் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News July 9, 2025

நாகை: 12ம் வகுப்பு போதும்.! கலெக்டர் ஆபீஸில் வேலை!

image

நாகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புற தொடர்பு பணியாளர்க்கான காலி பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.10,592 வரை சம்பளம் வழங்கப்படும். 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இணையதளத்தில் <<>>விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து, அதனை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலத்தில் ஜூலை 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.! இதனை அணைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News July 9, 2025

கடற்கொள்ளையர்களால் விரட்டியடிக்கப்பட்ட மீனவர்கள்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ வலைகளை வெட்டி அபகரித்து கொண்டு மீனவர்களை விரட்டி அடித்த சம்பவம், மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கரை திரும்பிய மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

News July 9, 2025

கீழ்வேளூரில் போக்குவரத்து மாற்றம்!

image

கீழ்வேளூர் ரயில்வே பகுதியில் தண்டவாளங்கள் இடையே பராமரிப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது. மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால், கீழ்வேளூரில் இருந்து பட்டமங்கலம், தேவூர், கிள்ளுக்குடி செல்லும் இரு சக்கர வாகனங்கள் வேன் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூத்தூர் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.

News July 9, 2025

நாகை மாவட்டத்தில் கால அவகாசம் நீட்டிப்பு

image

2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்னர் அமைக்கப்பட்ட மனை பிரிவுகளில், தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசாணையில் உள்ள விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வரண் முறைப்படுத்த 2026 ஜூன் 30 ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News July 9, 2025

10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை (1/2)

image

மத்திய அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே <>ssc.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். <<17003633>>(பாகம்-2)<<>>

News July 9, 2025

10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை (2/2)

image

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் <>www.ssc.gov.in<<>> எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT

News July 9, 2025

நாகை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை !

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / ஐடிஐ / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள்<> இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு நாகையில் வரும் ஜூலை.31 அன்று நடைபெற உள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 9, 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

image

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 2025 – 26ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, <>http://www.tnesevai.tn.gov.in <<>> என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றுடன் பதிவு செய்து, விண்ணப்பத்தினை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் வரும் ஜூலை 20-ம் தேதிக்குள் அளித்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News July 9, 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

image

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 2025 – 26ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், <>http://www.tnesevai.tn.gov.in <<>> என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றுடன் பதிவு செய்து, விண்ணப்பத்தினை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் ஜூலை 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!