India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 11) காலை 9.45 மணியளவில் விழிப்புணர்வு உறுதிமொழி, விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் ப ஆகாஷ் தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளார். துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <
▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு<
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்
➡️ தமிழகத்தில் நாளை 13.8 லட்சம் பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ ‘BLACK INK BALL POINT’ பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நாய்கள் கண்காட்சி வரும் ஜூலை 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பங்குபெறும் சிறந்த நாய்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7500, மூன்றாம் பரிசாக ரூ.5000 என வழங்கப்பட உள்ளது. எனவே இந்நிகழ்வில் செல்ல பிராணிகள் வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW !
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாத இறுதி வரை நடக்கிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள முன் கள பணியாளர்கள் தங்கள் பகுதிக்கு வரும் போது அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் பால்பண்ணைசேரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணம் கைமாறுவதாக நாகை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1.59 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அங்கு உள்ள அனைத்து அறைகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE
பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
நாகை மாவட்டம் புஷ்பவனத்தைச் சேர்ந்தவர் கதிரவன். இவர் நேற்று (ஜூலை 9) இரவு வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி சாலையில் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்த போது, நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்ததுள்ளது. இதில் நிலை தடுமாறிய கதிரவன் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.