India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை இணைய பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் முன்பின் தெரியாத நபர்களிடம் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் அனுப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் நவீன முறையில் இது போன்ற பணம் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுரை கூறப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 4 முதல் 27ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம், திருச்சி இடையே கடலூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் விடியற்காலை 5.30 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு வழியாக 12:30 மணிக்கு தாம்பரத்தை அடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் 3:45 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40க்கு திருச்சி வந்தடையும். Share பண்ணுங்க
மயிலாடுதுறை,பொது விநியோக திட்டத்தின் கீழ் பயன்பெறும் ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வருகிற 31ஆம் தேதிக்குள் மின்னணு அடையாள கைரேகை பதிவை மின்னணு கே.ஒய்.சி மூலம் மேற்கொள்ள வேண்டும். இன்று(மார்ச் 14), நாளை(15) மற்றும் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் குடும்ப அட்டைதாரர்கள் மின்னணு அடையாளப் பதிவை மேற்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஷேர் பண்ணுங்க
இருப்பு பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கோயம்புத்தூர் -மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில் மார்ச் 15ஆம் தேதி கோவையில் இருந்து திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும், திருச்சியில் இருந்து மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படும். மறு மார்க்கத்தில் மயிலாடுதுறை கோயம்புத்தூர் ஜனசதாப்தி விரைவு ரயில் திருச்சியில் இருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் முக்கிய சாலையில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் இரவு 8-மணியளவில் குளிர்சாதன பெட்டியில் ஐஸ் கிரீம் எடுக்க முற்பட்டபோது எதிர்பாராதமாக குளிர்சாதன பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு சிறுமியை தாக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே சிறுமி பலியானார். இது குறித்து செம்பனார்கோவில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குரூப் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். அவா் நேற்று வெளியிட்ட செய்தி: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 4 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாா்ச் 17 முதல் தொடங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் 9499055904 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். இதில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி துறை முகமது சபீர் ஆழம், மாவட்ட வருவாய் துறை அலுவலர் உமா மகேஸ்வரி அவர்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து வடிவேல் ஆகியோர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசயமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களநாயகி சமேத திருவிஜயநாதேஸ்வரர் கோயில். தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் விஜயநாதரை வணங்கினால் ஜெயம் கிட்டும் என்பதால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற எடுத்த செயல்களில் வெற்றி அடைய ஏராளமான பக்தர்கள் வந்து தொழுகின்றனர். தொழிலில் முன்னேற வியாபாரம் சிறக்க வியாபார அபிவிருத்தி ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. Share It
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 14.03.2025 தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறஉள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில். பரணி நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கும் இங்கு அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பார்வதி தேவியின் சாபத்தால் ஒளியை இழந்த சூரியன் இங்கு சாபவிமோசனம் பெற்றதாக ஐதீகம் குழந்தை வரம், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி அக்னீஸ்வரரை வழிபட்டால் கை மேல் பலன் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிரவும், Share It
Sorry, no posts matched your criteria.