Mayiladuthurai

News October 25, 2024

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகளும், இயற்கை விவசாயிகளும் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்தக் கூட்டத்தில் கோட்டாட்சியர் வேளாண் துறை அலுவலர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News October 25, 2024

நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

image

மயிலாடுதுறை சியாமளாதேவி கோயில் கும்பாபிஷேகம் 2 ஆண்டுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது ஒன்பது பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த 20 சவரன் தங்க சங்கிலியினை மர்ம நபர் திருடி சென்றனர். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வள்ளி என்ற பெண்ணை மயிலாடுதுறை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News October 25, 2024

காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்

image

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாலும் அதனை நிரப்ப கோரியும் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாததை கண்டித்தும் மயிலாடுதுறை மாவட்டக் அதிமுக சார்பில் நாளை (அக்.26) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

News October 24, 2024

சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி

image

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எதிர் கட்சித் மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாலும், மருந்து பொருட்கள் பற்றாக்குறையாலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. இதை கண்டுகொள்ளாத திமுக அரசைக் கண்டித்து வரும் சனிக்கிழமை 26ஆம் தேதி காலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

News October 24, 2024

மயிலாடுதுறை: எடப்பாடி பழனிசாமி இரங்கல் 

image

மயிலாடுதுறை மாவட்ட கழக அதிமுக செயலாளர் பவுன்ராஜின் மாமியார் தையல்நாயகி அம்மாள் வயது முதிர்வால் இன்று காலமானார். இந்த செய்தி அறிந்த அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இன்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

News October 24, 2024

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் அறிவிப்பு

image

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சொத்து உரிமை தாரர்கள் 2024 – 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென மயிலாடுதுறை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சொத்துவரி கேட்பில் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2024

வீட்டில் உறங்கிய மூதாட்டியிடம் தங்கநகை பறிப்பு

image

சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(70). இவர் இன்று தனது வீட்டில் படுத்து உறங்கியபோது பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர் லட்சுமி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார் சுதாரித்துக் கொண்ட லட்சுமி சங்கிலியைப் பிடித்துக் கொண்டபோது அதிலிருந்த சரடு குண்டு உள்ளிட்ட 2.5 பவுன் தங்க நகைகளை பறித்து தப்பி சென்றார். சீர்காழி போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர

News October 23, 2024

சீர்காழி சிறுவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

image

சீர்காழி அடுத்த காரைமேடு கிராமத்தில் மாவீரன் (9) சக்தி(9) ஆகிய இரண்டு சிறுவர்களும் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சுக்கான் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனிடையே இன்று உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

News October 23, 2024

தொழில் முனைவோர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்பேட்டை குளிச்சார் கிராமத்தில் அமைந்துள்ளது. தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில் மனைகள் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தொடர்ந்து புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகள் வாங்க விரும்புவோர் www.tansidco.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News October 22, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை

image

மயிலாடுதுறையில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது மாணவர்கள் நல்ல முறையில் கல்வியை கற்க வேண்டும் எனவும். தேவையில்லாத போதை பழக்கத்தில் ஈடுபடாமல் கல்வி ஒன்றே இன்றியமையாதது என்பதை உணர்ந்து கற்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஆசிரியர்கள் கற்பிக்கும் வகுப்பு பாடங்களை அன்றே உணர்ந்து கற்க வேண்டும் என தெரிவித்தார்.