India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை, சீர்காழியில் உள்ள விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற மார்ச் மாதம் 29ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைய அழைப்பு விடுத்துள்ளது. இதில் படித்து முடித்த பட்டதாரிகள் பங்கேற்று பயனடையலாம். Share பண்ணுங்க
பொதுமக்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் உள்ளிட்ட சுய விபரங்களை சமூக வலைதளங்களில் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவற்றை மோசடியாளர்கள் சுலபமாக பயன்படுத்தி உங்களது கணக்கை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
சீர்காழி அருகே திருப்புன்கூரை சேர்ந்த தேவி என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு கொலை செய்த அவரது கணவர் சிதம்பரத்தை சேர்ந்த சரவணனுக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ. 5000 அபராதமும் விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்துள்ளார். அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து சரவணன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் கூரைநாடு பகுதியில் அமைந்துள்ள நகர் புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அங்கு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் மருந்துகளின் இருப்பு நிலை குறித்தும் நேரில் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவு தேர்வில் (JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. உணவு, தங்குமிடம், 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை சென்னை பெட்ரோலின் கார்ப்பரேஷன் லிமிடெட் ஏற்கும். <
டெலிகிராம் குரூப்பில் இணையுங்கள் அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்யும் கும்பல் பெருகி வருகிறது. எனவே பொதுமக்கள் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. Share It
டெலிகிராம் குரூப்பில் இணையுங்கள் அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்யும் கும்பல் பெருகி வருகிறது. எனவே பொதுமக்கள் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. Share It
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <
போலியான இணையதள பக்கத்தில் தங்களது சுயவிபரங்களை பதிவிட்டால் உங்கள் தனிப்பட்ட விபரங்கள் திருடப்படலாம், மேலும் உங்கள் கணக்கில் உள்ள பணமும் பறிபோக வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து 1930 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
மயிலாடுதுறை முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக பொறுப்பு வழங்கப்பட்டு தற்போது பொறுப்பேற்றுள்ளார். கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி குறித்து அவர் கருத்து தெரிவித்தது சர்ச்சையானதால் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.