Mayiladuthurai

News October 31, 2024

மயிலாடுதுறை மக்களுக்கு எம்.பி. தீபாவளி வாழ்த்து

image

இன்று மயிலாடுதுறை முழுவதும் சிறப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா மயிலாடுதுறை மக்களுக்கு இன்று தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து நமது இலக்கு மகிழ்வான மயிலாடுதுறை என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

News October 31, 2024

மயிலாடுதுறை மக்களே பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள்

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாப்படும் நிலையில், பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மயிலாடுதுறை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள். SHARE IT.

News October 30, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்காக எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை. SHARE IT.

News October 30, 2024

மயிலாடுதுறையில் பெண் வாக்காளர்கள் அதிகம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார். இப்பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7,61, 221. ஆண் வாக்காளர்கள் 3,75,500, பெண் வாக்காளர்கள் 3,85,678, மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 43 பேர் ஆகும். மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். SHARE IT.

News October 30, 2024

திருவாவடுதுறை ஆதீனக் கோவிலில் சிறப்பு வழிபாடு

image

குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை அபயாம்பிகை உடனாய மயூரநாத சுவாமி திருக்கோயில் துலா உற்சவப் பெருவிழாவில் நேற்று குருமகா சந்திதானம் அருளாணையின் வண்ணம் விநாயகர் துவஜாரோகணம் சிறப்பாக நடைபெற்றது.

News October 28, 2024

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News October 28, 2024

மூதாட்டியிடம் நகையை பறித்த நபர் கைது

image

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் சுனாமி நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியில் இருந்த 2.5 பவுன் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர் சில தினங்களுக்கு முன்பு திருடி சென்றார். இது குறித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட ஆகாஷ் என்பவரை நேற்று கைது செய்து நகையை மீட்டனர்.

News October 28, 2024

காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி

image

மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பரந்தாமன்(39) நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பெருஞ்சேரி சுந்தரப்பன்சாவடி அருகே எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதயறிந்த முதல்வர் ஸ்டாலின் காவலரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கிட நேற்று உத்தரவிட்டுள்ளார்.

News October 27, 2024

மயிலாடுதுறை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக போலீஸ் கேன்டீனில் பணியாற்றி வருவபவர் காவலர் பரந்தாமன். இன்று மதியம் உணவு சாப்பிட சொந்த ஊரான எடகுடிக்கு டூவீலரில் சென்றவர் மீது சுந்தரப்பன்சாவடி அருகே அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே பரந்தாமன் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News October 27, 2024

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 1695.146 மெட்ரிக் டன் யூரியா, 831.702 மெட்ரிக் டன் டி.ஏ.பி. 627.914 மெட்ரிக் டன் பொட்டாஷ், 916.550 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் என ஆக மொத்தம் 4071.312 மெ.டன் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்