India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் ஆவின் விற்பனை நிலையம் அமைத்து செயல்படுவதற்கு முகவர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பமுடையோர் தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்திற்கு நேரில் வருகை தந்து பயன்பெறலாம். மேலும் தாலுகா வாரியாக ஆவின்பால் பொருட்களின் மொத்த விற்பனையாளர்களாக செயல்பட விருப்பமுள்ளோர் ஒன்றியத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 8015304755/8015304766/ 8807983824 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கிடாரங்கொண்டாளை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மயிலாடுதுறை தனிப்படை போலீசார், செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதில் அவர் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 7 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்
மயிலாடுதுறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். கல்வித்தரத்தின்படி மாதம் ரூ.200 முதல் ரூ.1000 வரை தொகை வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தேவையான ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28.11.2025க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(அக்.10) இரவு 10 மணி முதல் நாளை(அக்.11) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மக்களே தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணி: கிராம ஊராட்சி செயலர்
2.கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு
3.சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
4.ஆன்லைனில் விண்ணப்பம்: <
பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு டிசம்பர் 17-ம் தேதி பணி நியமன ஆணை வழங்கபடவுள்ளது. நீங்களும் உடனே Apply பண்ணுங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
பண்டிகை நேரம் என்பதால் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக அங்கீகாரம் இல்லாத இணையதள பக்கத்திலிருந்து வரும் போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
கனரா வங்கியில் தமிழ்நாடு முழுவதும் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Graduate Apprentices
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.15,000
4.வயது வரம்பு: 20-28 (SC/ ST-33, OBC 31)
5. கடைசி தேதி: 12.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சாவூர் காவல் சரக காவல் துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் ஆய்வு மேற்கொண்டார். காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குற்றப்பிரிவு, மாவட்ட கிடங்கு பிரிவு, அமைச்சுப் பணியாளர்கள் பிரிவு ஆகியவற்றில் வருடாந்தர ஆய்வு மேற்கொண்டார். பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் கிடங்கில் உள்ள பொருட்களை சரிபார்த்து காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
மயிலாடுதுறை மக்களே..உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டாம். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளையும் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் இன்று காலை 9-3 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளோர் சுயவிவரம், ஆதார் உள்ளிட்ட சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.