India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) யில் 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ₹15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
பூம்புகார் வன்னியர் சங்க மகளிர் மாநாடு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இரட்டை அடுக்கு தடுப்புகள் அமைத்தல்,மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, சீர்காழி அருகே பூம்புகாரில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மகளிர் மாநாடு இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக பூம்புகாரில் மிகப்பெரிய பந்தல் , பார்வையாளர்கள் அமர இருக்கைகள், சுகாதார வசதிகள் போன்றவற்றின் இறுதிக்கட்ட பணிகள் நேற்று இரவு நிறைவடைந்த நிலையில் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் நேற்று இரவு பூம்புகார் வருகை தந்து ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி பொறையார் காவல் சரகம் மருதம்பள்ளம் அருகே சீர்காழி மதுவிலக்கு பிறகு காவல் ஆய்வாளர் ஜெயா மற்றும் போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நான்கு சக்கர சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 383 புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்து மேலையூர் மற்றும் மேலவானகிரியை சேர்ந்த செந்தமிழ் செல்வன் மற்றும் ஜெகன்வளவனை கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார். நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு சிலை தயாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅ குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த முடி திருச்சம்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த சிலம்பம் விளையாடும் சிறுவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது சிலம்பு சுற்றி காண்பித்த சிறுவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
சுதந்திர தினத்தை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.