Mayiladuthurai

News January 16, 2025

மயிலாடுதுறை: பள்ளி, கல்லூரி மாணவரக்ளுக்கு போட்டிகள் அறிவிப்பு

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள் வருகிற ஜன.21 & 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. கவிதை, கட்டுரை, பேச்சு என மயிலாடுதுறையில் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2-ஆம் பரிசு ரூ.7,000, 3-ஆம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 8220021977 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News January 15, 2025

மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News January 15, 2025

களைகட்ட போகும் திருக்கடையூர் ரேக்ளா பந்தயம்

image

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி காணும் பொங்கல் அன்று புகழ் பெற்ற மாடு குதிரைகளுக்கான ரேக்ளா பந்தயம் நடைபெறும். இந்த ஆண்டும் ரேக்ளா பந்தயம் நடத்துவதற்காக ஆயத்த பணிகள் நடைபெற்றது. பந்தல் அமைத்தல். எல்லை கோடுகள் வரைதல். பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

News January 15, 2025

காங்கிரஸ் கமிட்டி அலுவலக திறப்பு விழாவில் எம்.பி பங்கேற்பு

image

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலகத்தை காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News January 15, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன் விலை நிலவரம்.

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் விலை சற்று அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. ஒரு கிலோ சுறா மீன் 35 ரூபாய், ஒரு கிலோ ஜிலேபி மீன் 200 ரூபாய், ஒரு கிலோ சங்கரா மீன் 175 ரூபாய், ஒரு கிலோ வாவல் 600 ரூபாய், ஒரு கிலோ நெத்திலி 150 ரூபாய், ஒரு கிலோ சீலா மீன் 350 ரூபாய் மற்றும் ஒரு இறால் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 15, 2025

மயிலாடுதுறை: முதல்வர் வழங்கிய தந்தை பெரியார் விருது 

image

மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளரும் விடுதலை பத்திரிகை ஆசிரியருமான விடுதலை க.ராஜேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை சார்பில் தந்தை பெரியார் 2024 விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில பல தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News January 15, 2025

மயிலாடுதுறை: திமுகவில் இணைந்த மாற்று  கட்சியினர்

image

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் கலைஞர் அரங்கத்தில் குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஆர். ஏற்பாட்டில் நக்கம்பாடி, பாளையூர், கொழையூர், ஊராட்சி சேர்ந்த அதிமுக அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து 30க்கும் மேற்பட்டோர்  விலகி மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

News January 15, 2025

மயிலாடுதுறை: 6 நாட்களுக்கு குடையை மறந்துடாதிங்க

image

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாகவே பரவலான மழை காணப்படுகிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 6 தினங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை ஷேர் பண்ணுங்க.

News January 14, 2025

 பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தேர்வு குறித்து ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே ஆத்தூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளினை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News January 14, 2025

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம்

image

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இன்று காவல்துறை சார்பில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைத்து காவலர்கள் ஒருவருக்கொருவர் பொங்கல்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் காவலர்கள் பலர் பங்கேற்று சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.

error: Content is protected !!