India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்க்கரை, வேஷ்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அரசின் பரிசுத்தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2,83,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் 86% அட்டைதாரர்கள் மட்டுமே பரிசுத்தொகுப்பினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 39,620 பேர் பரிசுத்தொகுப்பு பெற ஆர்வம் காட்டவில்லை.
சேலம் மாவட்டத்தில் நடைபெறுகின்ற மாநில சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட சார்பாக கருப்பு-சிவப்பு சீருடை அணிந்த சீனியர் பெண்கள் கபடி அணி முதல் லீக் சுற்றில் தருமபுரி மாவட்ட அணியினை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றியினை பதிவு செய்த விளையாட்டு வீராங்கனைகள், பயிற்சியாளர் மற்றும் மேலாளர் அவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் ரஜினி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டதன்படி, மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், கடந்த 4 நாட்களில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து 1,489 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று இரவு தை வெள்ளிக்கிழமை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் கலந்து கொண்டு வழிபாடு செய்த்தார். தை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்பாள் வீதி உலா நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்டம் முழுவதும் சிறப்பு வேட்டை நடைபெற்றது. இதில் கடந்த 4 நாட்களில் மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 33 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம் 1489 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டை அருமை முதியோர் இல்லத்தில் காசநோய் நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில்குமார், மயிலாடுதுறை வட்டாட்சியர் திருமதி.விஜயராணி மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
பொங்கல் பண்டிகை சிறப்பு ரயிலாக ஜனவரி 19ஆம் தேதியன்று ராமநாதபுரத்தில் மதியம் புறப்பட்டு அறந்தாங்கி , பட்டுக்கோட்டை , திருத்துறைப்பூண்டி , திருவாரூர் வழியாக மயிலாடுதுறை இரவு 9.34 மணிக்கு வருகை தந்து கடலூர் ,விழுப்புரம் , செங்கல்பட்டு வழியாக தாம்பரம் செல்லும் புதிய ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணத்தை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே உள்ள ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கிராம ஊராட்சி செயலகம் கட்டும் பணி, ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணி, அரசு வீடுகள் கட்டும்பணி, ஆகியவை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
திருச்சியிலிருந்து மயிலாடுதுறை வழியாக காலை 7.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் சென்று மீண்டும் தாம்பரத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வரும் இன்டர்சிட்டி ரயிலானது வருகின்ற ஜனவரி 17 , 18 , 19 ஆகிய நாட்கள் மட்டும் பொங்கல் சிறப்பு ரயிலாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும், முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வருகின்ற ஜனவரி-21ம் தேதி செவ்வாய் கிழமை பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் காலை 9.00 மணி முதல் போட்டிகள் நடைபெறும். இதில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.