India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.21) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் திருநகரி, மங்கைமடம், முள்ளிபள்ளம், குறவலூர், திருவெண்காடு, பெறையாறு, மேமாத்தூர், கீழபெரும்பள்ளம், காட்டுச்சேரி, திருக்களாச்சேரி, சாத்தனூர் பாலூர், வாழ்க்கை, வல்லம், வெள்ளதிடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை வழங்கினர். மேலும் கூட்டத்தின் நிறைவில் மொத்தமாக 244 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கீதா துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாடடம் சுற்று வட்டார பகுதிகளில் அண்மையில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
குத்தாலம் வட்டத்திற்கு உட்பட்ட பயனாளர்களுக்கு சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் எம்.எல்.ஏ உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி இயங்கிய 3 மதுபான கூடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதுடன், 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில், உரிமம் பெறாமல் இயங்கி வரும் மதுபானக்கூடங்களை உடனடியாக மூடாவிட்டால் கைது மற்றும் சீல் நடவடிக்கை தொடரும் என்றும் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கூரைநாடு , அக்கலூர் , தூக்கணாங்குளம் , சாலிய தெரு, அண்ணா வீதி, திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் இன்று சோதனை நடைபெற்றது. மேலும் பயணிகளின் உடைமைகள் உள்ளிட்டவற்றை காவலர்கள் உதவியுடன் அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (ஜன.18) முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 30 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (ஜன.19) மதியம் 1 வரை லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்க்கரை, வேஷ்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அரசின் பரிசுத்தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2,83,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் 86% அட்டைதாரர்கள் மட்டுமே பரிசுத்தொகுப்பினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 39,620 பேர் பரிசுத்தொகுப்பு பெற ஆர்வம் காட்டவில்லை.
சேலம் மாவட்டத்தில் நடைபெறுகின்ற மாநில சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட சார்பாக கருப்பு-சிவப்பு சீருடை அணிந்த சீனியர் பெண்கள் கபடி அணி முதல் லீக் சுற்றில் தருமபுரி மாவட்ட அணியினை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றியினை பதிவு செய்த விளையாட்டு வீராங்கனைகள், பயிற்சியாளர் மற்றும் மேலாளர் அவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் ரஜினி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.