India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை வழங்கினர். மேலும் கூட்டத்தின் நிறைவில் மொத்தமாக 294 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் அஜோய் குமாரை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா இன்று நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து சால்வை அணிவித்து வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் ராகுல் காந்தி கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
மயிலாடுதுறை கிழக்கு ஒன்றியம் பட்டமங்கலம் ஊராட்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் தலைமையில் இன்று திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்ட செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து கட்சிக்கு வரவேற்றார். சீர்காழி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தினேஷ்குமார் மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தேவையான உரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான யூரியா உரங்கள், உர நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டு 2900 மெ.டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், 2700 மெட்ரிக் டன் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும் ஆகக் கூடுதல் 5600 மெட்ரிக்டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க <
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான இரசாயன உரங்கள் போதிய அளவிற்கு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 65,687 எக்டேர் பரப்பளவில் நடப்பு சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் யூரியா 759 மெட்ரிக் டன்னும், டிஏபி 344 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 651 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 449 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் இடைநிலை, நிறுவன செயலாளர் இடைநிலை செலவு, மேலாண்மை கணக்காளர் ஆகிய பதவிகளுக்கு போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com-இல் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் உரம் வாங்கிச்செல்லும் போது தங்கள் ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள விற்பனை மையங்களை அணுகி விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை பெற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் உரக் கடைகளில் கூடுதல் விலைக்கு உரத்தினை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில 50-வது ஜூனியர் பெண்கள் கபடி போட்டி திருவண்ணாமலையில் நடைபெறுகின்றது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணியினர், அடுத்த மாதம் உத்தரகாண்டில் நடைபெறும் 50 வது ஜூனியர் தேசிய கபடி இறுதி போட்டியில் பங்கேற்கலாம். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 18 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உரிய பயிற்சியுடன் திருவண்ணமணலை அழைத்து செல்லப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் இன்று (நவ.09) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருவெண்காடு, கிடாரங்கொண்டான், எடமணல், வைதீஸ்வரர் கோவில், ஆச்சாள்புரம், அரசூர், கீழையூர், செம்பனார்கோவில், பரசலூர், புத்தூர், சீர்காழி டவுன், குலசந்திரபுரம், பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.