India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை உட்கோட்டம், பாலையூர் காவல் சரக பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சட்டவிரோதமாக சாராயம் கடத்தி வந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளியை கைது செய்த பாலையூர் காவல் நிலைய காவலர்களை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் , பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஜி.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்துள்ளார்.
சீர்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நாளை (பிப்.3) மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை புதுப்பட்டினம் பள்ளிவாசல் தெருவில் உள்ள ராயல் கிளினிக்கில் நடைபெற உள்ளது. முகாமில் சர்க்கரை நோய், இருதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் அனைத்து விதமான பொது மருத்துவத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
.மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்-7ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். இந்த முகாமில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட 12th, டிப்ளமோ, ஐடிஐ, பி.இ பட்டதாரிகள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். கூடுதல் விலவரங்களுக்கு04364299790 என்ற எண்ணைஅணுகவும். விலவரங்களுக்கு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டம் ஆக்கூர் ஊராட்சியில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு துவங்கி வைத்தனர். தொடர்ந்து வருவாய் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு சிட்டா நகல்களை வழங்கினர். உடன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எஸ்.பி ஸ்டாலின் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை மாண்புமிகு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று மாலை 6-மணி அளவில் தொடங்கி வைத்து சிறப்பிக்கவுள்ளார். இதில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன் ராஜகுமார், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
செம்பனார்கோவில் சுற்றுவட்டாரத்தில் வரும் பிப்-1 முதல் பிப்-4வரை மக்களுடன் முதல்வர் முகாமில் உயர்கல்வித்துறை அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தமுகாமில் 5 துறைகளை சார்ந்த 40 சேவைகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்படவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. செம்பனார் கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த முகாம் பிப்ரவரி நான்காம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் முன்னிலையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மற்றும் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளராக அமீனுல் நூர் தலைமை கழகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்கான அறிவிப்பை சென்னையில் தவெக கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டார். தொடர்ந்து தலைவர் விஜய்யிடம் வாழ்த்து பெற்ற நிலையில் புதிய பொறுப்பாளருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.