India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கான கபாடி போட்டியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
குத்தாலம் தோப்புத் தெருவை சோ்ந்தவா் தினேஷ். ஜேசிபி ஓட்டுநரான இவரை, கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஏற்பட்ட தகராறு ஒன்றில் அதே பகுதியை சோ்ந்த சரவணன் (27), ஆபேல் (25), ஜெயவீரன் (25) ஆகிய மூவர் மதுபோதையில் கத்தியால் குத்தியுள்ளனர். இது தொடர்பான வழக்கில் தினேஷை கத்தியால் குத்திய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.1000 அபராதம் விதித்து, மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். ரிப்போர்ட்டராக பதிவு செய்ய <
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் எனவும் இதில் பங்கேற்று பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைந்து உணவு பாதுகாப்பு பதிவு, உரிமம் முகாம் மற்றும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி முகாம் மயிலாடுதுறை அபிராமி ஹோட்டலில் இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பதிவு மற்றும் உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளனர்
கொள்ளிடம், சந்தைபடுகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இன்று கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் பெயர்ந்து விழுந்ததில் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கொள்ளிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும் ரயிலானது விராக்கியம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் சேலம் செல்லாது. சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வரும் ரயிலானது கரூர் ரயில் நிலையத்திலிருந்து மாலை புறப்பட்டு மயிலாடுதுறைக்கு வந்தடையும். பிப்ரவரி 7,11 ,14 ,18 ஆகிய நான்கு நாட்களுக்கு மட்டும் நாமக்கல் சேலம் இடையே ரத்து செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் கோ.வி செழியனுக்கு செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் முன்னாள் முதல்வர் கலைஞர் படத்தை பரிசாக கொடுத்து வரவேற்றார். அப்போது பூம்புகார் எம்.எல்.ஏ மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இன்று (பிப்.4) இந்து முன்னணி அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்துக்குக் காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சீர்காழியில் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவர் மற்றும் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக நேற்று (பிப்.03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாப்படுகை ஸ்டாலின் நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் ஜோதிபாசு(15). சிறுவன் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்துள்ளார். சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த சிறுவனை பெற்றோர் வேலைக்கு போக சொல்லி வலியுறுத்தியதால் மனமுடைந்த ஜோதிபாசு நேற்று விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.