Mayiladuthurai

News January 18, 2026

மயிலாடுதுறை: சர்க்கரை ஆலையில் திருடியவர் கைது

image

மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. ஆலையில் மர்ம நபர் ஒருவர் புகுந்து இரும்பு பொருட்களை திருடி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு இரும்பு பொருட்களை திருடிய தலைஞாயிறு பகுதியை சேர்ந்த விஜயபாலன் (46) என்பவரது கைது செய்து, ரூ.10,000 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News January 18, 2026

மயிலாடுதுறை: இன்று தை அமாவாசை – இதை மறக்காதிங்க

image

தை அமாவாசையான இன்று, முன்னோர்களுக்கு உங்களால் இயன்றதை கொண்டு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது பசி தாகம் தீர்ந்து வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். இதனை செய்தால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கி, சுப காரியத்தின் தடைகள் விலகி, சொத்துகள் சுகம் கிடைக்கும், நோய் நோடிகள் அடையும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இன்று மாலை, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க.

News January 18, 2026

மயிலாடுதுறை: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

மயிலாடுதுறை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்.
1. உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும்.
2. பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும்.
3. பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 18, 2026

மயிலாடுதுறை: உச்சத்தை தொட்ட விற்பனை – மக்கள் அதிர்ச்சி

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 43 டாஸ்மாக் மதுக்கடைகளும், நாகை மாவட்டத்தில் 52 டாஸ்மாக் மதுக்கடைகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களில் மட்டும் ரூ.15 கோடியே 21 லட்சத்து 11 ஆயிரத்து 720-க்கு மது விற்பனை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டை விட ரூ.5.87 கோடி அதிகமாகும். இதுகுறித்து உங்க கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்!

News January 18, 2026

மயிலாடுதுறையில் அதிரடி காட்டிய போலீசார்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் சட்டவிரோத மதுபான கடத்தல் மற்றும் விற்பனை குறித்து, மாவட்ட காவல்துறையினர் பல்வேறு இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த மயிலாடுதுறை தெற்கு குமர கட்டளை தெருவை சேர்ந்த செந்தில் (52) என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 810 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 18, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில், திருக்குறள் வார விழாவை முன்னிட்டு நாளை (ஜன.19) காலை 10:30 மணி அளவில், பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் குறல் ஒப்புவித்தல், குறல் சார்ந்த ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தங்களது ஆதார் அல்லது குடும்ப அட்டை நகலை சரி பார்ப்பிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News January 18, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.17) இரவு 10 முதல் இன்று (ஜன.18) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!