Mayiladuthurai

News February 24, 2025

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கல்

image

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மகளிர் சுய உதவிக் குழுவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் முன்னிலையில் கடன் உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News February 24, 2025

மயிலாடுதுறையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News February 24, 2025

ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் கொண்டாட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதிக்குட்பட்ட கொள்ளிடம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு புதிதாக கல்வெட்டு திறக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்து கொண்டார். மேலும் அதிமுக ஒன்றிய செயலாளர், கிளை பொறுப்பாளர்கள் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். மயிலாடுதுறையில் மட்டும் 46 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <><இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்><<>>. ஷேர் பண்ணுங்க

News February 24, 2025

மாயூரநாதர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா

image

மகா சிவராத்திரி விழா வரும் பிப்.26ஆம் தேதி வருவதை முன்னிட்டு, மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து தினமும் மாலை 5 மணி முதல் தொடங்கி நடைபெறும் விழாவானது மகா சிவராத்திரி அன்று முடிவடைகிறது. இசை, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும் இந்நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 23, 2025

மணல்மேட்டில் நாளை ரத்ததான முகாம்

image

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் ரத்ததான முகாம் மணல்மேடு அரசு மருத்துவமனையில் நாளை நடைபெற உள்ளது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 22, 2025

மயிலாடுதுறை நிர்வாகிகள் நீக்கம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட எம்ஜிஆர் அணி இணை செயலாளர் நெடுஞ்செழியன், குத்தாலம் முன்னாள் நிர்வாகி அய்யா.ராமகிருஷ்ணன், நகர அணி நிர்வாகி சிவலிங்கம், 1ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஜெயந்தி ரமேஷ் உள்ளிட்டோரை அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கி வைப்பதாக இன்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News February 22, 2025

திருக்கடையூரில் பிரபல பாடகர் சாமி தரிசனம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பிரபல பின்னணி பாடகர் மனோ வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி, அம்பாள் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

News February 22, 2025

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ள கூட்டத்தில் பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில், விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார்.

News February 22, 2025

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில் விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!