Mayiladuthurai

News September 14, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு 6227 பேர் எழுதினர்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 2 தேர்வு இன்று காலையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 24 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. மொத்தம் 8,293 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த நிலையில் 6227 பேர் தேர்வு எழுதினர்.

News September 14, 2024

குரூப்-2 தேர்வு: மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு

image

மயிலாடுதுறை ஏ.வி.சி.கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-2 தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா வட்டாட்சியர் விஜயராணி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News September 14, 2024

மட்டக்குளத்தில் கலெக்டர் ஆய்வு

image

மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட மட்டக்குளம் பகுதியில் சமூகநலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அமுதவல்லி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் நிறைவுற்ற பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News September 14, 2024

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற கடைகள், மதுபானக்கூடங்கள் அனைத்தும் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் தற்காலிகமாக டாஸ்மாக் கடைகளை ஒருநாள் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News September 13, 2024

சாலையை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு

image

குத்தாலம் வட்டாரம் கோமல் கிராமத்தில் முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கோமல் மாரியம்மன் கோவில் தெரு சாலை பணியை நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் கலெக்டர் ஷபீர் ஆலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோபனா புவனேஸ்வரி உள்ளிட்டோர் உள்ளனர்.

News September 13, 2024

காங்கிரஸ் எம்பி சுதா ட்விட்டரில் குற்றச்சாட்டு

image

சென்னை விமான நிலைய டோல்கேட் ஊழியர்கள் அடாவடியாக நடந்து கொண்டதாக காங்கிரஸ் எம்பி சுதா தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த போது இரண்டாவது முறையாக தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். எம்பிக்களுக்கு கட்டண விளக்கு உள்ள நிலையில் விமான நிலைய டோல்கேட் குழுவினர் தன்னை தடுத்ததாகவும் இந்த முறை நடவடிக்கை எடுக்காமல் விட மாட்டேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

News September 12, 2024

மயிலாடுதுறை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் இருந்து செப்டம்பர் 12 ஆம் தேதி இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை பகல் 12 மணிக்கு செங்கோட்டை செல்லும் ரயிலானது மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் குத்தாலம் ரயில் நிலையத்திலிருந்து 12.13 மணிக்கு ரயில் புறப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

மயிலாடுதுறையில் ரயில்கள் ரத்து விவரம்

image

மன்னார்குடியில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வந்து சேரும் ரயில் மற்றும் மாலை 5.15 மணிக்கு மன்னார்குடி செல்லும் ரயில் செப்டம்பர் 11ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவாரூரில் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு வந்து சேரும் ரயிலும் மேற்குறிப்பிட்டுள்ள தேதியில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

மயிலாடுதுறை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருச்சியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை ஒன்பது மணிக்கு வந்து சேரும் வகையில் செப்டம்பர் 12 முதல் 15ஆம் தேதி வரை குத்தாலத்துடன் நிறுத்தப்படும் எனவும் மயிலாடுதுறை ரயில் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மயிலாடுதுறையில் இருந்து காலை 12 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில் காலை குத்தாலத்தில் இருந்து 12.13 புறப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது.

News September 11, 2024

குத்தாலம் பகுதிகளில் 18 ஆம் தேதி ஆட்சியர் ஆய்வு

image

குத்தாலம் வட்டத்தில் செப்.18 ஆம் தேதி அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.