India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழியில் உள்ள ஜாமிஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஈகை திருநாளை முன்னிட்டு சீர்காழி அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் தேவைக்காக ரத்த தான முகாம் நாளை(ஏப்.21) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. காலை 9: 00 மணி முதல் 12: 30 மணி வரை நடைபெற உள்ள ரத்ததான முகாமில் ஆர்வமுள்ள பொதுமக்கள் முன்பதிவு செய்து பங்கேற்று ரத்த தானம் வழங்கலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் இறைச்சி விற்பனை நாளை ஏப்ரல் 21ஆம் தேதி தடை செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி விற்பனை செய்தால் உரிய அபராதம் விதிக்கப்பட்டு மிருகவதை தடுப்புச் சட்டம் 1960 -இன்படியும் , அரசு உத்தரவின் படியும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இன்று கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் வாக்கு என்னும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் 57 மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் , 90 தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்களும் , 200 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்காழியில் உள்ள ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை (ஏப்ரல்.21) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஆகையால் தேர் சுற்றி வரும் நான்கு வீதிகளில் பாதுகாப்பிற்காக மின் நிறுத்தம் செய்து தேர் சுற்றி வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் 2019ல் வாக்குப்பதிவு
73.93% பதிவாகியுள்ளது.2024ல் வாக்குப்பதிவு 70.06% தான் பதிவாகியுள்ளது.சென்ற தேர்தலை விட தற்பொழுது நடந்து முடிந்த தேர்தலில் 3.87% வாக்கு குறைந்துள்ளது.
மயிலாடுதுறை – 69.05%
சீர்காழி – 71.70 %
பூம்புகார் – 71.74 %
திருவிடைமருதூர் – 70.23 %
கும்பகோணம் – 67.98%
பாபநாசம் – 69.60%
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக வாக்குசாவடி மையங்களுக்கு சென்று வர வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாகன வசதிகள் saksham ஆப் அல்லது 1950 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் தங்களது வீட்டிலிருந்து வாக்குசாவடி மையங்களுக்கு சென்று வர வாகன வசதி செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை நகரில் இன்று 100.40 டிகிரி அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது. மதிய நேரத்தில் கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஒருசிலர் குடை பிடித்துச் சென்றனர். மயிலாடுதுறையை சேர்த்து தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரி தாண்டியது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
மயிலாடுதுறையில் பிரச்சனைக்குரிய நபர்கள் , ரவுடிகள் கண்டறியப்பட்டு 195 நபர்கள் மீது குற்றத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட எஸ்பி மேற்பார்வையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 6 காவல் துணை கண்காணிப்பாளர்கள் 21 காவல் ஆய்வாளர்கள் , 44 அதிவிரைவு குழுக்கள் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் 1480 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். மேலும் பதற்றமான 52 வாக்கு மையங்களில் ஒவ்வொரு மையத்திலும் 1 காவலர் மற்றும் 4 மத்திய பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.