India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 129 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து 58,620 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 34, 919 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று 130வது முகாம் மயிலாடுதுறை வட்டம் ஆத்தூர் கிராமத்திலும் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவிலிலும் நடைபெற்றது.
ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் <
தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் மணி விழா நிகழ்வை முன்னிட்டு 27 இளையோருக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வருகிற 9.11.2025 அன்று திருமணங்கள் நடைபெற உள்ளது. இதில் மணமக்களுக்கு பவுன் தாலி, வஸ்திரம், சீர் வரிசைகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு பெற்றோர்கள் நேரில் வந்து திருமடத்தில் விண்ணப்பத்தினை பெற்று 30 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை வட்டம் ஆத்தூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் வேண்டி மனு அளித்த பயனாளிக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பெயர் சேர்த்தல் ஆணையை வழங்கினார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை வருவாய் வட்டாட்சியர் விஷ்ணு பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
சீர்காழி தாலுகாவில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சீர்காழி பகுதியில் உள்ள தனியார் உர கடைகள் மற்றும் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் போதிய அளவு யூரியா இல்லாததால் நடவு பணி பாதிப்படைந்து வருகிறது. உரிய நேரத்தில் நடவு செய்யவில்லை என்றால் அறுவடை நேரத்தில் மழையில் நெல்மணிகள் பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!
கொள்ளிடம் ,தேவநல்லூரை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹரிகரன்(22), ஆதித்யா(21), சகோதர்களான இவர்கள் பிறவியிலேயே வளர்ச்சி குன்றியவர்கள் ஆவர். இந்நிலையில் ஹரிஹரன் 10 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துவிட தம்பி மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் ஆதித்யா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக அங்கீகாரம் இல்லாத இணையதள பக்கத்தில் இருந்து வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்கள். மேலும் தகவலுக்கு ONLINE SHOPPING Cyber Crime Help Line: 1930 & Website: www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 11,12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 15ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், நாளை காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.