Mayiladuthurai

News February 26, 2026

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு : ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (பிப்.26) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு சார்ந்த நிர்வாக காரணங்களால் நாளை நடைபெற இருந்த கூட்டம் மார்ச் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News February 25, 2026

மயிலாடுதுறையில் போலீசார் இரவு ரோந்து பணி விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (பிப்.25) இரவு 10 மணி முதல் நாளை (பிப். 26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 25, 2026

மயிலாடுதுறை: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

image

உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 25, 2026

மயிலாடுதுறை: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

image

உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 25, 2026

மயிலாடுதுறை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம்!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 25, 2026

மயிலாடுதுறை: ரூ.38,666 சம்பளத்தில் வங்கி வேலை

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. சம்பளம்: ரூ.38,666- ரூ. 55,833
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 21-27
6. கடைசி தேதி: 04.03.2026
7.விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News February 25, 2026

மயிலாடுதுறை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News February 25, 2026

மயிலாடுதுறை: ரேஷன் கார்டில் பிரச்சனையா? ஒரு CALL போதும்!

image

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News February 25, 2026

மயிலாடுதுறை: போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பணிகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கில் அனைத்து காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளினர்கள் வரை சிறப்பு பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் தலைமையில் சட்ட விதிகள், வாக்குச்சாவடி பாதுகாப்பு, EVM மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது

News February 25, 2026

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா

image

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலத்தில் திருநங்களைகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மயிலாடுதுறையில் 47 திருநங்கை வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுகளுக்கு அரசு சார்பில் இலவச இடம், வீடு வழங்க வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் 21 பேர் கொண்ட பட்டியலை சமூக நலத்துறை அலுவலத்தில் அளித்ததில், 6 பேருக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, ஆவணங்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!