India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழி அருகே கோயில்பத்து மெயின் ரோட்டை சேர்ந்தவர் முஹம்மது ரபீக் (55). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார் இந்நிலையில் நேற்று இரவு கடை வாசலில் முகமது ரபீக் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து சீர்காழி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கல்லூரியில் செப்டம்பர் 21 நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட பழைய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27 ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கையர்களில் கல்வி பயின்று இடையில் நிறுத்திய திருநங்கைகளை கண்டறிந்து அவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு தகுதியான திருநங்கையர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. எனவே மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி திருநங்கைகள் பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மாதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வசந்தன் (34). கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி இரவு திருமணமாகாத விரக்தியில் தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை பிராந்தியில் கலந்து குடித்துள்ளார். மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பின்னர் பாண்டிச்சேரி ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மயிலாடுதுறையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக பணிபுரிபவர் மணிக்குமார்(58). இவர் பணிச்சுமை காரணமாக நேற்று இரவு அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை பணிக்கு வந்த அலுவலர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில் தற்காலிகமாக வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் – திருச்சி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், செப்டம்பர்-19, 20 மற்றும் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாமல் விருதுநகர் மற்றும் திருச்சி வழியாக மயிலாடுதுறை வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த ஆண்டு சிறுமிக்கும் குத்தாலத்தை சேர்ந்த ஜெயகாந்தன்(20) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் ஜெயகாந்தன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தி அவரை தேடிவருகின்றனர்.
தந்தை பெரியாரின் 146-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், தொடர்ந்து இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை கூறைநாட்டில் தனியார் கடையில் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த 19 வயதான இளைஞன் தான் குடியிருக்கும் மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய மயிலாடுதுறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணையில் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.