Mayiladuthurai

News March 18, 2024

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் போட்டி

image

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக சார்பில் ராமலிங்கம் வெற்றி பெற்றார்.

News March 17, 2024

மயிலாடுதுறை புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக எந்நேரமும் 1800-425-8970 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச்.18 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையில் நடைபெறாது என பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் , ஆட்சியருமான ஏ.பி மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

மயிலாடுதுறை அருகே இரண்டு பெண்கள் கைது 

image

மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்படி சட்டவிரோதமாக சாராயம் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்து காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 சாராயபாட்டில்களை பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்த 2 பெண்களையும் இன்று கைது செய்தனர்

News March 16, 2024

மயிலாடுதுறை அருகே இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

image

சீர்காழி அருகே மேலையூரில் உள்ள சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சீர்காழி ஒன்றிய தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையேற்று மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் தேவேந்திரன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

News March 16, 2024

மயிலாடுதுறை: காங்கிரஸ் நிர்வாகி நினைவு நாள்

image

மயிலாடுதுறை சீர்காழியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றிய பெருந்தலைவருமான கே.பி.எஸ்.மணி என்பவரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அவரது மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 16, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள 13 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-32, 37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

error: Content is protected !!