India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்புடன் கடலோர ஊரக பகுதிகளில் உள்ள ஊராட்சி குளங்களை தூர்வாரி, நிலத்தடி நீரை மேம்படுத்திடும் நடவடிக்கைகள் தொடர்பாக முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை மயிலாடுதுறை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புயுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருபுவனம் வைகாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சரபர் அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் எஜமான் உத்தரவு பெறும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2024-2025 கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பிமகாபாரதி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் உடனடியாக ஆத்தூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து பாண்டி சாராயம் விற்பனை செய்த பெண்மணியை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் பாண்டி சாராயத்தை இன்று பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி அதிவேகமாக சென்ற 2 தனியார் பேருந்துகள் விபத்தில் சிக்கியதில் 20 பேர் காயம் அடைந்தனர். முடிகொண்டான் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, அதிகளவு பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதற்காக 2 பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு சென்றது. இதில் ஒரு பேருந்து, அப்பகுதியில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மங்கைமடத்தில் 2 சிறுவர்களை இன்று தெருநாய் கடித்ததில் காயமடைந்த தர்ஷன் (8) தர்ஷார்த் (4) இரண்டு சிறுவர்களையும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தெரு நாய்கள் அச்சுறுத்தல் காரணமாக வெளியில் நடமாட முடியவில்லை என மங்கைமடம் பொதுமக்கள் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.மேலும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது சில இடங்களில் மிதமான கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் அறிவுறுத்தபட்டது.
Sorry, no posts matched your criteria.