India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரடி பகுதியில் இன்று கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதியதில் ஒருவருக்கு தலையில் படுகாயமும் மற்றவருக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சி சிங்கா நோடை காழியப்பநல்லூர் ஊராட்சி அனந்தமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு காய்கறி சாகுபடிகள் செய்துள்ளனர்.கத்தரி,வெண்டை,புடலை,பீர்க்கங்காய்,கொத்தவரங்காய்,மிளகாய்,பாகற்காய் என பல வகை காய்கறிகள் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் செடிகள் இலைகள் உதிர்ந்து கருகும் அபாயம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சி சிங்கா நோடை காழியப்பநல்லூர் ஊராட்சி அனந்தமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு காய்கறி சாகுபடிகள் செய்துள்ளனர்.கத்தரி,வெண்டை,புடலை,பீர்க்கங்காய்,கொத்தவரங்காய்,மிளகாய்,பாகற்காய் என பல வகை காய்கறிகள் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் செடிகள் இலைகள் உதிர்ந்து கருகும் அபாயம்.
சீர்காழி பகுதியில் சமூகநல செவிலியராக பணியாற்றிய தையல்நாயகி என்பவரின் பணி நிறைவு பாராட்டு விழா நிகழ்ச்சி இன்று சீர்காழியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சீர்காழி எம்எல்ஏ எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அவரது பணியை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான அதிகாரிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் காழியப்பநல்லூர் சிங்காநோடை தில்லையாடி அனந்தமங்கலம் மாமா குடி கிடங்கள் காலகஸ்திநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மா சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலின் தாக்கத்தினால் மா சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது இலைகள் உதிர்ந்து செடி பாதிப்பு.
தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகே திங்கட்கிழமை தோறும் வார காய்கறி சந்தை நடைபெறுகிறது.நேற்று மாலையில் நடைபெற்ற வார காய்கறி சந்தையில் கிராம பகுதிகளில் விளையும் காய்கறிகளையும் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்தனர்.பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.
மயிலாடுதுறையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஏவிசி கல்லூரியில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முகவர்கள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு கண்காணித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரி வளாகம் முழுமைக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு 24 மணி நேரமும் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எழுத்தர்கள் மற்றும் கணினி பதிவு செய்யும் காவலர்களுக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் கைவிரல் ரேகை பதிவு செய்யும் புதிய தொழில்நுட்பம் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான காவலர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்மணிக்கு உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது. இதனை அறிந்த நீடூர் தமுமுக நிர்வாகிகள் உடனடியாக மருத்துவமனைக்கு வருகை தந்து பெண்ணுக்கு இன்று இரத்தம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்கி மருத்துவர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.