India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு நேரத்தில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மர்ம நபர்கள் தாக்க முற்பட்டால் வாகனத்தை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு நேரத்தில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மர்ம நபர்கள் தாக்க முற்பட்டால் வாகனத்தை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்படி மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் மற்றும் போலீசார் காரைக்கால் பண்பலை வானொலி மூலம் பொது மக்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று(ஜூன் 26) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், மதியம் முகாம் அலுவலகம் சென்றவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளி செந்திலை 15 நாட்களுக்கு பிறகு மயிலாடுதுறை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மயிலாடுதுறை நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்து இருந்தனர். இதனிடையே மனுவை விசாரித்த நீதிபதி ஒருநாள் விசாரணைக்கு அனுமதி அளித்ததை அடுத்து போலீசார் செந்திலை இன்று காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதா இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுதா, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் சீகன்பால்க் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்ட சபையில் தமிழக முதல்வர் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில் சீகன்பால்க் என்பவர் தான் முதல் முதலில் தமிழ் மொழிக்கு அச்சு இயந்திரம் கொண்டு வந்தவர் ஆவார். இவர் ஓலைச்சுவடிகளில் இருந்து பல்வேறு நூல்களை அச்சு இயந்திரம் மூலம் மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டது. அப்போது பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இலவச தையல் இயந்திரங்களை இன்று வழங்கினார். அப்போது கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் , மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.