Mayiladuthurai

News March 25, 2025

மயிலாடுதுறையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 26) புதன்கிழமை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எரிவாயு பயன்படுத்துவோர் சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என அறிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள் 

News March 25, 2025

மயிலாடுதுறை : இலவச நுழைவுத் தேர்வு பயிற்சி

image

TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் ( JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.

News March 25, 2025

போக்ஸோ குற்றவாளிக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த பிரபு என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றவாளி பிரபுவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 5000 அபராதமும் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி இன்று தீர்ப்பளித்துள்ளார். Share It

News March 24, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல் 

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்துக்குட்பட்ட கிராமங்களில் வருகின்ற மார்ச் 26 அன்று காலை 9 மணி முதல் மார்ச் 27 அன்று காலை 9 மணி வரை தமிழக அரசின் திட்டமான ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் முகாம் நடைபெறும் எனவும் இதனை பயன்படுத்திக் கொண்டு மக்கள் பயனடைய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

News March 24, 2025

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 465 மனுக்கள்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். மொத்தம் 465 மனுக்கள் தரப்பட்டு பரிசீலனை நடைபெற்றது.

News March 24, 2025

செம்பனார்கோயில் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

image

செம்பனார்கோயில் கஞ்சா நகரம் பகுதியை சேர்ந்தவர் அகோர முருகன் (54) விவசாயக் கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்தபோது அங்கு அருந்து கிடந்த மின்கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனை செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். செம்பனார்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 24, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உங்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது என்று சொல்லி, QR Code ஐ ஸ்கேன் செய்ய சொன்னால் செய்ய வேண்டாம் எனவும், இந்த வழியில் நூதனமாக மோசடிகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற ஏதேனும் புகார்கள் இருந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்.

News March 24, 2025

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

image

மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் சுமார் 1 கிலோ அளவிலான கஞ்சா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வீரமணி (27), அபிஷேக் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News March 23, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போதும், பொருட்களை வேண்டாம் என ரத்து செய்யும்போதும் OTP எனும் ஒருமுறை கடவுச்சொல்லை கேட்பார்கள். அவ்வாறு ஓடிபி பகிர்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டுவிடலாம் எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். Share பண்ணுங்க

News March 23, 2025

படகை இழந்த மீனவருக்கு ஆறுதல் கூறிய எம்.பி

image

சீர்காழி,புதுப்பட்டினம் ஊராட்சி பழையாறு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரது விசைப்படகு கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதும் எரிந்து சேதமடைந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது. இதனிடையே பழையாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.பி சுதா மீனவர் கோவிந்தனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு வங்கி கடன் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.

error: Content is protected !!