India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழி மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் 134 கடலோர குடியிருப்புகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியில் மே 17 அன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அறிவித்துள்ளார். தொடர்ந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எடக்குடி வடபாதி முதல் மாமாகுடி வரையிலான பிரதான குடிநீர் உந்துகுழாய்களில் பழுது சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வெப்ப அலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருந்து முறையான தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்து வரக்கூடிய நாட்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் சிறுவர் மற்றும் சிறுமியர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பயிற்சிகள் , சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை தவிர்த்திட வேண்டும் என மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் மாநில நிர்வாகி கோமல் அன்பரசன் ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம் ரவிச்சந்திரன் முன்னாள் ஒன்றிய செயலாளர் கொள்ளிடம் ஜெயராமன் வக்கீல் பாலாஜி பேராசிரியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் நேரில் சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து விளையாடி மகிழ்ந்தனர்.
மயிலாடுதுறை, தருமபுரம் பகுதியில் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலின் ஏகதின உற்சவத்தை முன்னிட்டு அபிஷேக ஆராதனை சிறப்பாக நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்து கஞ்சி மற்றும் தயிர் சாதம் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்கு வழங்கினார்.
சீர்காழி அருகே புத்தூரில் சீனிவாசா சுப்புராய அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒரே அரசு தொழில்நுட்ப கல்லூரியான இதில் முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க மே27ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் குமார் இன்று செய்தி வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாடுதுறையில் அருள்மிகு வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய பால்குடத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது இரண்டு வயதுடைய ரோகித் என்ற பாலகன் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய நிகழ்வு காண்போரை பக்தி பரவசமடைய செய்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.