Mayiladuthurai

News May 16, 2024

மயிலாடுதுறை மழைக்கு வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஆலோசணை கூட்டம்

image

மயிலாடுதுறை:
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஆலோசணைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவிரிப்படுகையின் பராமரிப்பு என்ற பெயரில் புதிய கிணறுக்கு ஒப்பான வேலைகளை ONGC நடத்துகிறது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது. இதில் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் O.ஷேக்அலாவுதீன், மமக மாவட்ட செயலாளர் கூறைநாடு பாசித் கலந்து கொண்டனர். 

News May 15, 2024

மயிலாடுதுறை பிரதான சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீர்

image

மயிலாடுதுறை நகரின் பிரதான சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். தொடர்ந்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

மயிலாடுதுறை மாவட்ட தேர்ச்சி விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ் ஒன் பொதுத்தேர்வில்   10,319 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,915 பேர் இன்று தேர்ச்சி பெற்றனர். மேலும் தேர்ச்சி விழுக்காடு 86.39 சதவீதம் பெற்று மாவட்ட அளவில் 35 வது இடத்தை மயிலாடுதுறை மாவட்டம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 83.70 சதவீதமாக இருந்த நிலையில் நிகழாண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

மயிலாடுதுறை: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 37ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் மயிலாடுதுறை மாவட்டம் 37ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 74.96% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 64.61 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 83.56 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT: மயிலாடுதுறை 35வது இடம்

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்கள் 80.71 % பேரும், மாணவியர் 91.34% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 86.39% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

மயிலாடுதுறையில் விவசாய பணிகள் மும்முரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 1,07,435 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெறும் நிலையில் 38,441 ஹெக்டேரில் குறுவை சாகுபடி இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.தற்போது முற்பட்ட குறுவை நெற்பயிர்கள் சுமார் 30 முதல் 40 நாள் பருவத்தில் விளைந்துள்ள நிலையில் விவசாயிகள் களைக்கொல்லி தெளிக்கும் பணியில் மும்முரமாக விவசாயிகள் இன்று ஈடுபட்டுள்ளனர்.

News May 14, 2024

மயிலாடுதுறை ஒரு சில இடங்களில் மழை

image

மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பகுதிகளில் நேற்று பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒரு சில இடங்களில் அவ்வப்பொழுது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன் பந்தல் மற்றும் உத்தரங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது.

News May 14, 2024

மயிலாடுதுறையில் கால தாமதமாக செல்லும் ரயில்

image

மைசூரிலிருந்து மயிலாடுதுறைக்கு வரும் ரயில் காலதாமதமாக வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மயிலாடுதுறையில் இருந்து காலை 8.05 மணிக்கு இதே ரயில் சற்று காலதாமதமாக காலை 9.20 மணிக்கு கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு புறப்படும் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!