India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீா்காழி அருகே சிங்காரதோப்பை சோ்ந்தவா் ராஜேந்திரன். இவருக்கும், அதே தெருவை சோ்ந்த பாண்டியன், ரங்கசாமி, ஜெயக்குமாா் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2015, ஆக.16-ஆம் தேதி இரவு ராஜேந்திரனை தாக்கிய அவரது வீட்டு சுற்றுச் சுவரை 8 பேர் சேதப்படுத்தினா். புகாரின்பேரில் சீா்காழி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில், 8 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் யூனியன் கிளப் இணைந்து நடத்தும் குறு தனியார் வேலை வாய்ப்பு முகாம் மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட பணிகள் இருக்கின்றன. தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் அன்றே பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொறையார் கடை வீதியில் இன்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இரண்டு தரப்பினர் ஆஜராக உள்ள நிலையில் மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குத்தாலம் அருகே 108 திவ்ய தேசங்களில் பத்தாவது ஸ்தலமாக போற்றப்படும் ஆமருவிப்பெருமாள் கோயில் தேரழுந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளிய பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் திருக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 25ஆம் தேதி 10.30 மணியளவில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் யூனியன் கிளப் ஆகியவை இணைந்து நடத்தக்கூடிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி காலை 9 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரை யூனியன் கிளப்பில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் மழை முழுவதுமாக குறைந்து காணப்படுவதால் அனைத்து பகுதிகளிலும் நள்ளிரவு மழையின் அளவு பூஜ்ஜியமாக காணப்படுகிறது. இருப்பினும் நேற்று காலை முதல் இன்று காலை 6 மணி நிலவரப்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமாக 167.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக செம்பனார்கோவில் பகுதியில் 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அதிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நாளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 94426-26792 மற்றும் மின்சாரத்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் மயிலாடுதுறை – 04364-252218 , 9498482319 , சீர்காழி – 04364-279301 , 9445854006 மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாடு அறை தொலைபேசி எண் மயிலாடுதுறை -04364-222277 , 8668171501 மற்றும் சீர்காழி – 04364-276336 , 9842382883 புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.