Mayiladuthurai

News March 21, 2025

மயிலாடுதுறை இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

image

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அபிநாத் (20) கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அபிநாத் மீது ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால் அபிநாத்தை எஸ்.பி.ஸ்டாலின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.

News March 21, 2025

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே உயர் அதிகாரி இன்று ஆய்வு

image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தரமற்றதாகவும் காலதாமதமாகவும் நடைபெறுவதாக நாடாளுமன்ற கூட்டத்தில் மயிலாடுதுறை எம்.பி சுதா குற்றம் சாட்டி பேசினார். இந்நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்றத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

News March 20, 2025

சீர்காழியில் மாபெரும் மிதிவண்டி போட்டி

image

சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாபெரும் மிதிவண்டி போட்டி வருகிற மார்ச் 23ஆம் தேதி ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் 14 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.முதல் பரிசு ரூ. 5000 வழங்கப்பட உள்ளது.30 கி.மீ சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

News March 20, 2025

அரசுப்பள்ளி புதிய கட்டிடம் ஆய்வுசெய்த மாவட்ட கலெக்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்  ஆய்வு செய்தார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. உமாமகேஷ்வரி , மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.சாந்தி ஆகியோர் உள்ளனர்.

News March 20, 2025

அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 19, 2025

இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி

image

மயிலாடுதுறையில் இளநிலை பொறியியல் பட்டைய படிப்பு (BE) முடித்த ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்கள் புத்தாக்க பொறியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இப்பயிற்சி பெற்ற 28 இளைஞர்கள் தனியார் முன்னணி நிறுவனங்களில் உயர்பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர். தகுதியுடையவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

News March 19, 2025

அறுவடை இயந்திரத்தில் வாகனம் மோதி தொழிலாளர் பலி

image

மணல்மேடு, களத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சதீஷ் (45) விமல்பாபு என்பவருடன் கடலங்குடியிலிருந்து மணல்மேடு நோக்கி நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவடை இயந்திரத்தின் மீது எதிர்பாராதவிதமாக வாகனம் மோதியதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விமல் பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 19, 2025

மார்ச் 29 மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை, சீர்காழியில் உள்ள விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற மார்ச் மாதம் 29ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைய அழைப்பு விடுத்துள்ளது. இதில் படித்து முடித்த பட்டதாரிகள் பங்கேற்று பயனடையலாம். Share பண்ணுங்க

News March 18, 2025

சுய விபரங்களை கடவுச்சொல்லாக பயன்படுத்தக் கூடாது 

image

பொதுமக்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் உள்ளிட்ட சுய விபரங்களை சமூக வலைதளங்களில் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவற்றை மோசடியாளர்கள் சுலபமாக பயன்படுத்தி உங்களது கணக்கை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

News March 18, 2025

மனைவியைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

image

சீர்காழி அருகே திருப்புன்கூரை சேர்ந்த தேவி என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு கொலை செய்த அவரது கணவர் சிதம்பரத்தை சேர்ந்த சரவணனுக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ. 5000 அபராதமும் விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்துள்ளார். அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து சரவணன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!