India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
பொதுமக்களிடையே போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் உதவி ஆணையர் மாணிக்கராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முத்துவடிவேல் மற்றும் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் கடைமடை பகுதியாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் புது மண்ணியாறு, தெற்குராஜன் வாய்க்கால், பொறை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களும், நூற்றுக்கணக்கான கிளை வாய்க்கால்களும் உள்ளன. வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்க்கால் கரைகளில் உடைப்பை சரி செய்ய மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியில் நீர்வளத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
மயிலாடுதுறை, 100 மதிப்பு கூட்டும் அலகுகள் திட்டத்தின் கீழ் விவசாய விளை பொருட்களை, மதிப்பு கூட்டி விற்பனை செய்ய விரும்பும் தொழில் முனைவோர், அரசிடம் இருந்து 25% முதல் 35% வரை மானியம் பெற <
செம்பனார்கோவில் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவர் 10 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே, சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுமக்கள் வங்கியில் இருந்து மட்டும் கடன் பெற வேண்டும் என்றும், போலியான கடன் செயலிகள் (loan app) மூலம் கடன் பெற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. இதன் மூலம் மோசடிக்காரர்கள் உங்கள் விபரங்களை பெற்று அதை வைத்து மிரட்டி பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 129 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து 58,620 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 34, 919 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று 130வது முகாம் மயிலாடுதுறை வட்டம் ஆத்தூர் கிராமத்திலும் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவிலிலும் நடைபெற்றது.
ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் <
Sorry, no posts matched your criteria.