Madurai

News January 8, 2025

பால் வழங்கி நூதன போராட்டம்

image

பசும்பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்கவும், ஆண்டு தோறும் பாலுக்கு விலை நிர்ணயம், 50 சதவீதம் மானியத்தில் தீவனம், ஆவின் நிர்வாகம் பொங்கலுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் இலவசமாக பால் வழங்கி ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தினர்.

News January 7, 2025

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் எண்ணிக்கை வெளியீடு 

image

மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் அலங்காநல்லூரில் 5786, அவனியாபுரத்தில் 2026,பாலமேட்டில் 4820 காளைகளும் அவிழ்த்து விடப்பட உள்ளது. மேலும்  அலங்காநல்லூரில் 1698, அவனியாபுரத்தில் 1735, பாலமேட்டில் 1914 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 

News January 7, 2025

போராட்டகாரர்களுக்கு உணவு சமைத்து வழங்கிய கிராமத்தினர்

image

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என கூறி இன்று மேலூரில் நடைபெற்ற நடைப்பயண போராட்டத்தில் கலந்து கொண்ட  போராட்டக்காரர்களுக்கு அரிட்டாபட்டி மற்றும் வல்லாளப்பட்டியில் உணவு தயாரிக்கப்பட்டு, குடிநீர் பாட்டில்களுடன் வழங்கப்பட்டது. இதனால் முதியோர் மற்றும் பெண்கள் போராட்டத்தை முடித்து உணவு அருந்தி மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

News January 7, 2025

ஜல்லிக்கட்டு காளைகளின் எண்ணிக்கையை அறிவிக்கும் ஆட்சியர்

image

மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க madurai.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய (ஜன6)நேற்று மாலை 5 மணி முதல் (ஜன.7)இன்று மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பதிவுக்காலம் முடிவடைந்த பின்பு இன்று மாலை 6 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா செய்தியாளர்களிடம் ஆதாரப்பூர்வமாக எத்தனை காளைகள் பங்கேற்க உள்ளது என்பதை தெரிவிக்க உள்ளார்.

News January 7, 2025

மதுரையில் 2024-இல் 4.85 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள்

image

மதுரை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆணையர் லோகநாதன் பேட்டியில் கடந்த 2024-ஆம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறலில் 4,85,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதவிர விபத்துகள் தொடா்பான ஆய்வில், நகரில் 40 சதவீதம் பாதசாரிகள், 56.5 சதவீதம் டூவீலர் ஓட்டினர்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த ஆண்டும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

News January 7, 2025

மதுரையில் அடிக்கடி விபத்தாகும் இடம்-போலீஸ் ஆய்வின் தகவல்

image

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று போலீசாரின் டூவீலர் வாகன விழிப்புணர்வு பேரணியை தமுக்கத்தில் இருந்து கமிஷனர் லோகாதன் துவக்கி வைத்தார். பின் அவர் கூறியதாவது, மதுரை நகரில் 76 இடங்களில் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு ஜிக்ஜாக் தடுப்புகள் ரோட்டில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

News January 7, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (06.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. SHARE செய்யவும்.

News January 6, 2025

மதுரை: காவல் துணை ஆணையர் பொறுப்பு ஏற்பு

image

மதுரை மாநகரத்தின் காவல் துணை ஆணையராக (வடக்கு) இதுவரை பணியாற்றிய மதுகுமாரி, மதுரை 6வது பட்டாலியன் எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு புதிதாக G.S. அனிதா IPS, இன்று (06.01.2025) பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் நெல்லை தலைமையகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 6, 2025

மதுரை மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று(ஜன.06) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2025

மதுரையில் பெண் வாக்களார் தான் அதிகம்

image

மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு மொத்த வாக்காளர் 27 லட்சத்து 29 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 13 லட்சத்து 40 ஆயிரத்து 159, பெண்கள் 13 லட்சத்து 89 ஆயிரத்து 224, மற்றவர்கள் 288 வாக்காளர்கள் உள்ளனர். இதை இன்று கலெக்டர் சங்கீதா வெளியிட்டார். மதுரையில் பெண் வாக்காளர்கள் தான் அதிகம்.

error: Content is protected !!