Madurai

News March 20, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கும் முகாம்

image

மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு 2025-2026 நிதியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை மற்றும் புதுப்பித்து வழங்கும் இலவச பயண அட்டை வழங்கப்படவுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 25, 26, 27 ஆகிய 3 தினங்களிலும், உடலியக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மற்றும் மனவளர்ச்சிகுன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 28ம் தேதியும் நடைபெற உள்ளது.*ஷேர்

News March 20, 2025

மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்

image

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சென்னை, கோவை, மதுரையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகக் கூறினார். மேலும், நகரங்களை விரிவாக்கம் செய்யும்போது குப்பைகள் கொட்டும் இடம் மையப்பகுதிக்கு வந்துவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், குப்பைகள் வெளியே பறக்காமல் இருக்க, குப்பைக் கிடங்கைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது என்றார்.

News March 20, 2025

மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

image

மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Driver, Nurse, Medical Officer என மொத்தமாக 123 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8th, 12th, B.Pharm, B.Sc, BA, D.Pharm, Diploma, DMLT, ITI, M.Sc, MA, MBBS, Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் தொடங்கும் நாள் 19-03-2025 – 24-03-2025 வரை. தகுதியான நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும். <> லிங்கை <<>> *ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

பாஜக நிர்வாகி மூச்சு திணறலால் உயிரிழப்பு

image

மதுரை, செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கருப்பசாமி நேற்று காலை கூடல் நகர் அருகே மர்மமான முறையில் காரில் உயிரிழந்து கிடந்தார். அவர் எப்படி உயிர் இழந்தார் என்று சந்தேகம் எழுந்து வந்த நிலையில் தற்போது அவரது மரணத்திற்கு மூச்சுதிணறல் தான் காரணம் என உடற்கூராய்வில் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News March 20, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (19.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News March 19, 2025

மதுரை : அக்னிவீர் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்

image

மதுரை : இந்திய ராணுவ அக்னிவீர் படைப்பிரிவிற்கான, அக்னிவீர் பொது பணியாளர், அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் எழுத்தர்- கிடங்கு மேலாளர், அக்னிவீர் தொழிலாளி ஆகிய பணிகளுக்குஆட்சேர்ப்பு பணிகள் துவங்கியுள்ளன. மதுரை உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல்.10க்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

சித்திரை திருவிழா முக்கிய அறிவிப்பு வெளியீடு

image

மதுரையின் முக்கிய திருவிழாவான ” சித்திரை திருவிழா ” குறித்து மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் நேற்று ( செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. அதன்படி, மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8ஆம் தேதி நடைபெறுகிறது. மே 9ஆம் தேதி தேரோட்டம்.

News March 19, 2025

40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் திருவிழா

image

மதுரை மேலூர் அருகேயுள்ள சொக்கம்பட்டியில் கொப்புடாரி அம்மன் கோயில் திருவிழா மார்ச் 4 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கிடாவெட்டி பொங்கல் வைத்து படையலிட்டனர். மேலுார் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2025

மதுரை மாநகர இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

image

மதுரை மாநகர் காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட தல்லாகுளம் தெப்பக்குளம் அவனியாபுரம் தெற்கு வாசல் திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் தொடர்பான விவரங்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 18, 2025

மதுரை: மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி

image

மதுரை கீழக்கரை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்ற உட்கடை கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்பாண்டி (24) என்பவர் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன் , முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைசர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!