Madurai

News January 11, 2025

மதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த SSI கைது!

image

மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக SSI சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம்(டிச.13) திருக்கார்த்திகைக்கு வந்த சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து, அவர் கழிவறைக்கு சென்றபோது ஜெய பாண்டி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 4 பிரிவுகளின் கீழ் போக்சோவில் வழக்கு பதியப்பட்டு, சஸ்பெண்டாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

News January 11, 2025

மதுரையில் சிறப்பு நீதிமன்றம் – சட்டப்பேரவையில் CM அறிவிப்பு

image

இன்றைய(ஜனவரி 11) தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, சென்னையின் சுற்றுப்புற பகுதி, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார். SHARE IT.

News January 11, 2025

மதுரையில் இலவச தையல் பயிற்சி

image

மதுரை மத்திய அரசின் டி டி யு ஜி கே ஒய் திட்டம் சார்பில் எஸ் எஸ் காலனி வடக்கு வாசல் பெட்கிராட் நிறுவனத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு 4 மாத இலவச தையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கலாம். சீருடை உபகரணங்கள் இலவசம், ஆதார் ரேஷன் கார்டு நகல், கல்வி சான்றிதழ் முன்பதிவு செய்ய வேண்டும். தொடர்புக்கு 89030 03090. SHARE செய்யுங்கள்.

News January 11, 2025

டங்ஸ்டன் திட்டம் வராது: முதல்வர் உறுதி

image

சட்டசபையில் டங்ஸ்டன் குறித்து முதல்வர் பேசியதாவது, டங்ஸ்டன் திட்டம் குறித்து மீண்டும் பேசி மக்களை குழப்புகின்றனர். டங்ஸ்டன் திட்டம் வராது வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்.மத்திய அரசின் சுரங்க திட்டத்திற்க்கு நாடளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தது அதிமுக தான் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

News January 11, 2025

சென்னை-மதுரைக்கு இன்று மெமு ரயில்

image

சென்னை-மதுரை முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில்கள் இயக்கம். சென்னை எழும்பூர்-மதுரை மெமு ரயில் ஜன. 11 காலை 10.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு மதுரையை வந்தடையும். மறுமார்க்கத்தில் மதுரை-சென்னை மெமு ரயில் ஜன.11 இரவு 8.30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு சென்னையை சென்றடையும். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News January 11, 2025

4,979 ஏக்கரில் எங்கும் டங்ஸ்டன் சுரங்கம் வராது –  அண்ணாமலை

image

மேலூர் அருகே ஏ.வல்லாளப்பட்டி மந்தை திடலில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநில அரசு ஆட்சேபனை தெரிவிக்காததால் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மத்திய அரசு டெண்டர் விட்டது.மக்களின் கோரிக்கையை ஏற்று சுரங்க திட்டம் நிறுத்தப்பட்டது. 4,979 ஏக்கர் பரப்பளவில் எங்கும் டங்ஸ்டன் வராது என்றார்.

News January 10, 2025

சீமான் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

image

 தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய சீமான் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகம் முழுவதும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இன்று, சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

News January 10, 2025

பொங்கலை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

பொங்கலை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம்(மதுரை)லிட்., சார்பில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் மூலம் ஜன.10 முதல் 13 வரை 455 பேருந்துகளும், பண்டிகைக்கு பின்பு ஜன. 14 முதல் 19 வரை 725 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் (OTRS) https://www.tnstc.in, TNSTC Mobile App கைபேசி செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக முன்பதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2025

மதுரையில் மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு 

image

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளரிடம் மதுரையில் பேசுகையில், “தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,இத்திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது” கூறினார்.

News January 10, 2025

திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் 4 கோடிக்கு ஆடு விற்பனை

image

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற திருமங்கலம் ஆட்டுச் சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 20 ஆயிரத்துக்கும் மேலான ஆடுகள் 4 கோடி ரூபாய் வரை விற்பனையானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆட்டின் விலை 3000 ரூபாய் வரை கூடுதலாக விற்பனையானதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!