India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை சத்திரப்பட்டி அடுத்துள்ள மஞ்சம்பட்டி கிராமத்தில் விஜயா கார்டன் ஹோம் உள்ளது. இங்கே சட்டத்திற்கு புறம்பாக 11 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி உட்பட ரெசார்ட் மேனேஜர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் ஐயர் பங்களா பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இன்று (நவ.12) பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும் தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மதுரையில் 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது இயல்பை விட 5.4 டிகிரி அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் குடும்பத்தார்களால் கைவிடப்பட்ட முதியோர்களை அவர்களுக்கான ஆரோக்கியமான சுற்றுப்புற சூழ்நிலையில் தங்குவதற்கான இடவசதி உணவு மற்றும் உடை வழங்கி அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பதை உணர்த்த மதுரை மாநகர காவல்துறை அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து “காவல் கரங்கள்”என்ற அமைப்பு மூலம் மறுவாழ்வு அளித்து பலரின் பாராட்டை பெற்று வருகிறது. உதவி பெற 82487-41359, 0452-2330100 அழைக்கலாம் *பகிரவும்*
மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் 2024 ஆம் ஆண்டு நவ.16 ,17 , 23 & 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 10 சட்டமன்றத்தொகுதிகளில் 2,752 வாக்குச்சாவடிகளில் அதாவது 1,165 வாக்குச்சாவடி மையங்களில் முகாம் நடைபெற உள்ளதால் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் பயனடைந்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 12 ஸ்டேஷன்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் (ஏ.டி.வி.எம்.,) மூலம் பயணிகளுக்கு முன்பதிவில்லா டிக்கெட் வழங்கும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நவ.29க்குள் மூத்த கோட்ட வணிக மேலாளர், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம், மதுரை – 625016 எனும் முகவரியில் உள்ள பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மதுரை சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ராஜ்குமார், இன்று(நவ.12) மதுரை விமான நிலையம் அருகே சென்ற போது, பைக்கில் வந்த ஆறுமுகம் என்பவர், தன் வண்டிக்கு வழிவிட கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, காவலர் ராஜ்குமாரை கத்தியால் குத்தியுள்ளார் ஆறுமுகம். ஆறுமுகத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுப்பதற்கும், தாய்மார்கள் பாலூட்டுவதற்கும் ஓய்வறை பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அனைத்து நடைமேடைகளிலும் பயணிகள் ஓய்வறை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
மதுரை சி.எம்.ஆர் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் இன்று(நவ.12) காலை 11 மணிக்கு மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டலத்திற்கான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில், சுமார் ரூ.45 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையின் போது மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி இங்கு நடைபெற இருப்பதால், இதர சமயங்களில் மைதானத்தில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை. எனவே,சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இங்கு பலூன் திருவிழா நடத்தப்படவுள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் தன்னார்வ சமூக பணியாளர்களாக தன்னார்வ அடிப்படையில் பணியாற்றிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள நபர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய சுயவிவர அறிக்கையை வரும் 30 11,2024 ம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அளிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.