India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவ.15 அன்று நடைபெற உள்ளது. முகாமில் 30க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத்தேர்வு செய்ய உள்ளனர். 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளலாம் என்பதால் பயன்பெற ஆட்சியர் அறிவுறுத்தல்.
மதுரையில் இருந்து நவ.15 முதல், ஜனவரி 18 வரை தினமும் அதிநவீன மிதவை பேருந்து (அல்ட்ரா டீலக்ஸ்) இயக்கப்பட உள்ளது. தினமும் இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு தேனி வழியாக பம்பைக்கு இயக்கப்படும். இந்த சிறப்பு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக ‘ஆன்லைன்’ மூலமாக www.tnstc.in மற்றும் TNSTC யின் அதிகாரி பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் வாக்காளர் வரைவுப்பட்டியல் திருத்தப்பணிகளுக்கான சிறப்பு முகாம் சனி மற்றும் ஞாயிறு (நவ.16,17) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றன. இந்த பணிக்கான சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் 1,165 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பிற திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோர் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று(நவ.12) 41 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 89 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல் மதுரை விமான நிலையத்தில் ‘எம் பாக்ஸ்’ எனப்படும் குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை தொடர்ந்து செய்யப்படுகிறது. இதுவரை யாருக்கும் நோய் கண்டறியப்படவில்லை என மருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறது.
மதுரையில் நேற்று 41 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 89 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். மிருக காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார் சாலை தொழில்நுட்பத்தை மலேசியாவில் பயன்படுத்த கல்லூரி – மலேசியா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. வாசுதேவன் 2002ல் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்ச்சாலை அமைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். 2006ல் இந்திய காப்புரிமை பெறப்பட்டது.
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் தை பொங்கலன்று பலூன் திருவிழா நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நடைபெறும் பலூன் திருவிழா அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலையொட்டி ஜனவரி 3ம் வாரத்தில் ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுடன் பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் துறை இயக்குநர் வழிகாட்டுதலின் படி “போலீஸ் அக்கா” என்ற முன் மாதிரி திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.12) மதுரை மாநகர காவல் ஆணையர் மலோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகரில் உள்ள 155 பள்ளிகள் 25 கல்லூரிகளில் வாரம் ஒரு முறை மாணவ மாணவியரிடம் கலந்துரையாடி உளவியல் ஆலோசனை வழங்க பெண் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் இன்று (நவ.13) காலை 11 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை, மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் குறைகள் சார்ந்த மனுக்களை குறைதீர் கூட்டத்தில் வழங்கி பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் பகுதியில் இன்று (நவ.12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.