Madurai

News March 26, 2025

ஆடு,மாடு,பூனைக்கு வரும் ஏப்.முதல் கட்டணம் வசூல்

image

ஆடு, மாடு, நாய் ஆகிவை வளர்க்க உரிமை கட்டணம் வசூலிக்க மதுரையில் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் வரும் மதுரை நகரில் ஏப்ரல் முதல் ஆடு, மாடு, நாய், பூனை, குதிரைக்கு புதுப்பிக்கப்பட்ட உரிமம் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா தெரிவித்துள்ளார். *செல்ல பிராணி, கால்நடை வளர்ப்போருக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News March 26, 2025

456 காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது – ஆட்சியர்

image

காச நோய் காற்றில் பரவும் தொற்றுநோய் ஆகும் மற்றவருக்கு நுரையீரலை பாதிப்படைந்து காச நோய் பரவக்கூடும் இதுவரை காச நோயாளிகளாக 27% இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை காச நோயாளிகளின் நண்பன் திட்டத்தால் மதுரை மாவட்டத்தில் காசநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தன்னார்வலர்களின் மூலம் 456 காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என  மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்று விழிப்புணர்வு விழாவில் தெரிவித்தார்

News March 26, 2025

துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் – டிஎஸ்பி மிரட்டல்

image

உசிலம்பட்டி வக்கீல்கள் சங்கத்தின் துணைச் செயலாளர் கனி ராஜன் கடந்த 8-ந்தேதி பெண் ஒருவரின் காரை அபகரித்துக் கொண்டவர்கள் மீது புகார் அளிப்பதற்காக அந்த பெண்ணுடன் சென்றார். அப்போது தரக்குறைவாக பேசி சுட்டுவிடுவேன் என உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மிரட்டியுள்ளார். புகார் அளிக்க சென்றவர்களை சுட்டு விடுவேன் என மிரட்டிய சம்பவத்தில் காவலர் விரிவாக பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.

News March 25, 2025

மதுரை: சாலைகளில் சாகசமா ? காவல்துறை வைத்த செக்!

image

மதுரை மாநகரில் கடந்த சில தினங்களாகவே சாலையில் சிலர் பைக் ரேஸ், சாகசங்கள் செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்தநிலையில் மதுரை மாநகரில் சாலை விதிமீறல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க 8300021100 என்கிற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகைப்படம் எடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதியின் பெயரை குறிப்பிட்டு அனுப்பலாம்  என காவல்துறையினர்  வேண்டுகோள் வைத்துள்ளனர்.

News March 25, 2025

மதுரைக்கு புதிய டிஐஜி நியமனம்

image

மதுரை காவல் சரகத்தின் டிஐஜி பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்த நிலையில் ராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த அபினவ் குமார் மதுரை சரக டிஐஜி யாக நியமனம் செய்து உள்துறை செயலகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் பத்து டிஐஜிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2025

மதுரை மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் , கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.உங்கள் தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News March 25, 2025

காசநோய் பாதிப்பில்லா 92 ஊராட்சிகள்

image

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா பங்கேற்றுப் பேசும்போது, இந்திய அளவில் 25 லட்சம் பேரும், தமிழகத்தில் 1 லட்சம் பேரும், மதுரை மாவட்டத்தில் 6 ஆயிரம் பேரும் காசநோயாளிகளாகக் கண்டறியப்படுகின்றனர்.மேலும் கடந்த ஆண்டு, மதுரை மாவட்டத்தில் காசநோய் பாதிப்பில்லாத 92 ஊராட்சிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News March 24, 2025

மதுரையில் 3நாட்கள் குடிநீர் நிறுத்தம்

image

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையத்தில் உள்ள நீர்நிலை தேக்க தொட்டியின் அருகில் செல்லும் மெயின் பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணிகளை மாநகராட்சி தரப்பினர் மேற்கொள்ள இருப்பதாலும் , புதிய குழாய்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ள இருப்பதால் மூன்று நாட்கள் ( மார்ச் 26,27,28) மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக மதுரை மாநகராட்சி அறிவிப்பு

News March 24, 2025

மதுரை மாநகராட்சியின் முடிவில் திடீர் மாற்றம்

image

மதுரை மாநகராட்சியில் மாடுகள் வளர்ப்புக்கு ரூ.500, குதிரை ரூ.750, ஆடு ரூ.150, பன்றி ரூ.500, நாய், பூனை ரூ.5750 என கடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கட்டணம் விதிப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவதால் திருத்தப்பட்ட கட்டணத்தை செயல்படுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 24, 2025

சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் சாப்டூர் அடுத்து அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். SHARE செய்யவும்.

error: Content is protected !!