India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை நாராயணபுரம் கண்மாய் அருகே இன்று சாலை ஓரமாக சுமார் 70 வயது மதிக்கத்தக்க இறந்த நபரின் தலை மட்டும் கிடந்தது. இதை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த தும்மக்குண்டுவை சேர்ந்த பேச்சி (70), என்பவரது சடலம் நாராயணபுரம் மயானத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் அதன் தலையை நாய் கவ்விக்கொண்டு சாலையோரம் விட்டு சென்றது தெரிய வந்துள்ளதாக மதுரை மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதியில் உள்ள காவல் சரகங்களான மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (14.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு இதில் குறிப்பிட்டுள்ள எண்களை அழைக்கலாம்.
மதுரை சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (நவ.14) 8வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவியரும் பள்ளியை புறக்கணித்து இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
திமுக கூட்டணி தொடர்ந்து செயல்படும். கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளார். மதுரையில் வைகோவின் உதவியாளர் ஜெயபிரசாந்த் திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கூட்டணியில் சேதாரம் ஏற்படும் என எதிர்தரப்பினர் நினைக்கின்றனர். 2026-லும் இதே கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்தார்.
இன்று (நவ.14) மதுரையிலிருந்து மாலை 8.50 மணிக்கு புறப்படும் மதுரை – சென்னை (22624) விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது. மேலும், நாளை (நவ.15) சென்னையிலிருந்து இரவு 10.5 மணிக்கு புறப்படும் (22623) சென்னை – மதுரை விரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கொண்டுவரப்பட்ட தமிழக கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற திரை மறைவு பணிகள் துவங்கிவிட்டதாக மதுரை எம்.பி சு.வெ., குற்றம் சாட்டியுள்ளார். இதனை தடுக்க தமிழக அரசு அனைத்து முயற்சியும் செய்ய வேண்டும் எனவும், சரஸ்வதி நாகரிகம் என்றால் கோடிகளை அள்ளித்தருவார்கள். தமிழ் நாகரிகம் என்றால் கட்டிடம் பழசு என காரணம் கூறுவார்கள் எனவும் விமர்சனம்.
மதுரை மாவட்ட கால்நடை மண்டல துணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதுரை மாவட்டத்தில் உள்ள 3,27,900 ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் ஆடுகளுக்கு நோய் தாக்குதல், சில நேரங்களில் இறப்பு ஏற்படும். எனவே மாவட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஆகையால், தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் ‘டிஜிட்டல் கிராப் சர்வே’ திட்டத்தின் கீழ் 52.4 சதவீத பயிர்கள் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் நிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்களின் சாகுபடி விவரம், பரப்பளவு குறித்த விவரங்கள் அடங்கல் செயலி மூலம் நவ.6ல் இருந்து சர்வே செய்யப்பட்டு பதிவேற்றப்படுகிறது. நவ.21 க்குள் பணிகளை முடிக்க வேளாண் துறை கமிஷனர் அபூர்வா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக மதுரை திருநகர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது 6 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை தொடர்ந்து தலைமறைவாக உள்ள கஸ்தூரியை கைது செய்ய திருப்பரங்குன்றம் சரக காவல் துணை ஆணையர் குருசாமி தலைமையிலான 2 தனிப்படைகள் சென்னை விரைந்துள்ளன.
சென்னையில் தெலுங்கு பேசும் மக்கள் பற்றி நடிகை கஸ்தூரி இழிவாக பேசியது பெரும் பேசுபொருளாக மாறியது. இதற்கு பலத்த கண்டனம் எழுந்ததுடன் வழக்குகளும் பதிவானது. இந்த நிலையில், கஸ்தூரி முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் கஸ்தூரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட் இன்று (நவ.14) உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.