Madurai

News November 15, 2024

மதுரையில் நடைபெறும் தனுஷின் ‘இட்லி கடை’ பட சூட்டிங் 

image

தமிழகத்தின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பூஜை துவங்கிய நிலையில், இதற்கான படப்பிடிப்பு மதுரை மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

News November 15, 2024

மதுரை முல்லை நகர் விவகாரம் – சீமான் அறிக்கை

image

மதுரை முல்லை நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 575 குடும்பங்களின் குடியிருப்புகளைக் கண்மாய் இருந்த பகுதி என்று கூறி மக்களை வெளியேற்றி வீடுகளை இடிக்க தமிழ்நாடு அரசு அறிக்கை அனுப்பியிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 15, 2024

கிரானைட் குவாரி -மதுரை ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு

image

மதுரை மாவட்டத்தில் மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கைவிடப்பட்ட கிரானைட் குவாரிகளின் பெரும் குட்டையில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, கனிம வள விதிப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா? – டிடிவி ஆவேசம்

image

மதுரை காட்டுநாயக்கர் சமுதாய மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தங்கள் குழந்தைகளுடன் 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. சாதி சான்று வழங்க மதுரை மாவட்ட நிர்வாகத்தையும் திமுக அரசையும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

News November 15, 2024

மதுரை மாநகரில் நாளை எங்கெல்லாம் மின்தடை

image

மதுரை மாநகர் பகுதியான அரசரடி, அண்ணா நகர் ஆரப்பாளையம் துணைமின்நிலையங்களில் நாளை(நவ.16) மின்பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அண்ணா நகர், கேகே நகர், அரசு மருத்துவமனை கோரிப்பாளையம், இ எஸ் ஐ மருத்துவமனை, கோச்சடை, செல்லூர், முனிச்சாலை, சம்மட்டிபுரம், ஆரப்பாளையம் மெயின் ரோடு, கிராஸ் ரோடு, புட்டுத்தோப்பு, பெத்தானியாபுரம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. *பகிரவும்*

News November 15, 2024

மதுரை மாநகரில் நாளை எங்கெல்லாம் மின்தடை

image

மதுரை மாநகர் பகுதியான அரசரடி, அண்ணா நகர் ஆரப்பாளையம் துணைமின்நிலையங்களில் நாளை(நவ.16) மின்பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அண்ணா நகர், கேகே நகர், அரசு மருத்துவமனை கோரிப்பாளையம், இ எஸ் ஐ மருத்துவமனை, கோச்சடை, செல்லூர், முனிச்சாலை, சம்மட்டிபுரம், ஆரப்பாளையம் மெயின் ரோடு, கிராஸ் ரோடு, புட்டுத்தோப்பு, பெத்தானியாபுரம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. *பகிரவும்*

News November 15, 2024

மதுரையில் தனுஷ் படத்தின் படப்பிடிப்பு

image

மதுரை : தனுஷ் இயக்கத்தில் 4வது படமாக ‘இட்லிக்கடை’ என்கிற திரைப்படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இட்லிக்கடை படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மதுரையில் தொடங்குகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.

News November 15, 2024

தேனியில் நீருபரை தாக்கிய மூவர் கைது

image

தேனி, கண்டமனுார் அருகே ஜி. உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(50), நிருபராக பணிபுரிகிறார். நவ.13 அன்று கோயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் அரிவாளுடன் மூவர் ஓடிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்து எங்கே ஓடுகிறீர்கள் என கேட்ட பால்பாண்டியின் இடது பக்க தலையில் அரிவாளால், வெட்டினர். பின்னர் பால்பாண்டியை மருத்துவமனையில் அனுமதித்தனர். கண்டமனுார் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

News November 15, 2024

மதுரையில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை 

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரையில் ஒலிம்பிக் அகாடமி அமைகிறது. இதற்காக மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கில், 6 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிக்கிற உலக அளவிலான ஒலிம்பிக் போட்டியைக் கூட மதுரையில் நடத்தலாமா என்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

News November 15, 2024

பஞ்சாயத்து தலைவரின் வெற்றி செல்லாது – ஐகோர்ட்

image

காரைக்குடி சங்கராபுரம் கிராம ஊராட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலில் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி வெற்றியை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.