India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் வரும் மே 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் முதலிடம் பெரும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.70 ஆயிரமும், 3ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது. எனவே பங்கேற்க ஆர்வமுள்ள அணிகள் வரும் மே 8ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தல்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்துடன் மதுரை மீனாட்சி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். தனது மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்துடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றிய செல்லூர் ராஜூ, அதிமுக கூட்டணி நிச்சயம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று காலை முதல் துவங்கி மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடியில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில், இன்று காலை மதுரை கண்ணனேந்தல் உள்ள சேவியர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தனது வாக்கினை செலுத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் அனைத்து பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில மதுரையில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் சரவணன், இன்று நரிமேடு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற வரும் நிலையில் மதுரையில் திமுக கூட்டணி கட்சி சார்பில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிடும் சு.வெங்கடேசன், இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தி விரலில் மை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 22.35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மேலூர் தொகுதியில் 28.66%, மதுரை கிழக்கில் 22.56%, மதுரை மேற்குத் தொகுதியில் 19.79%, தெற்கு தொகுதியில் 20.08%, மேற்குத் தொகுதியில்21.87%, மதுரை மத்திய தொகுதியில் 20.96 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலையை மூடக்கோரி சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, மேலப்பட்டி ,சோளம் பட்டி, பேய்குளம் உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகளில் மக்கள் தேர்தலை முழுமையாக புறக்கணித்துள்ளனர். இங்கு இதுவரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இதனையடுத்து அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வாக்களிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமார் காலை 7 மணியளவில் ஒத்தக்கடை அருகிலுள்ள புதுதாமரைப்பட்டி வாக்குச் சாவடிக்கு வந்தார். பின்னர் சுமார் 7.15 மணி அளவில் வரிசையில் நின்று, தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
சிவில் சர்வீஸஸ் தேர்வில் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த லிந்தியா, முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 354வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அவர், “பயோமெடிக்கல் இன்ஜினியரிங் முடித்து கன்சல்டன்டாக வேலை செய்தேன். பின் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க வேலையை விட்டேன். அப்பா, அம்மா, அண்ணன் ஊக்குவிப்பால் முதல் முயற்சியிலேயே வென்றுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரம் முடிந்து இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில பெண் நிர்வாகி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த சாஹின் பாத்திமா, நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.